பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鶯.碑調 தோல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

' பூனியன் மொய்ம்பினன் புனித னெய்தவில்

நாணினி தேற்றினான் நடுங்கிற் றும்பரே...'

(டிெ செய். 60)

'கோமுனி யுடன்வரு கொண்ட லென்றபின் தாமரைக் கண்ணினு னென்ற தன்மையால் ஆமவ னே கொலென் றைய நீங்கினுள், வாமமே கலையிற வளர்ந்த தல்குலே,

(ைெடி செய். 62)

இவற்றில், இராமன் சிவன்வில்லை நாணேற்றி முறித்துச் சீதைக்குரிய நாயகனாயினன்' எனத் தோழி வந்து கூற, சீதை தான் முன் தெருவிற் கண்டு காதலித்து மனத்தால் மணந்த அத்தலைவன் பெயரும் புகழும் அத்தோழிவாய்க் கேட்டு மகிழ்ந் ததைக் கம்பர் விளக்குதலறிக.

'நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்

டிசையும் இனிய செவிக்கு ’’ (குறள். 1199)

'மென்றோள் ஞெகிழ்த்தான் தகையல் லால் யான்கானே னன்று தீ தென்று பிற’’ (கலி. 142)

ான வருவனவும் உறுபெயர் கேட்டு மகிழும் கூற்றுக்களாத லறிக.

(20 'நலத்தக நாடிற் கலக்கமும் அதுவே" என்பது நன்றாகத் தகுதிநோக்கி யாரா யின் மயக்கமென்பதும் மேலது போலவே காதற்றிணை நிமித்தமாகும் மெய்ப்பாடேயாம் முன் குறித்த 19ம் அமையாவழியே, அவற்றினிறுதியில் கலக்கம் எழும் என்னும் அதன் சிறப்பியல் குறித் தற்கு அது இறுதியில் வேறு பிரித்துக் கூறப்பட்டது அதற்குச் செய்யுள்:

'யாவது மறிகிலர் கழறு வோரே;

தாயில் முட்டை போலவுட் கிடந்து சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ? யாமைப் பார்ப்பின் அன்ன காமங் காதலர் கையற விடினே.” (குறுந் 152)