பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உச 2. விக

படுந் தெய்வந் தனக்கும் அஞ்சப்படுமென்பது அல்லது உத் தலைவற்கு ஏதம் வருமெனவும் அஞ்சுவளென்பது.

'சினைவாடச் சிறக்குநின் சினத்தணிந் திகெனக்

கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ" (கலி 16)

என்பது, தெய்வத்திறநோக்கித் தெருமந்ததாம் என்னை? அவற் கிலவெனவும் அன்னவெனவுந் தாம் வேண்டிய குறை முடியாது பிரிந்தார் மாட்டு ஏதஞ்செய்யுங்கொல் என்றஞ்சி உரைத்தவாறு.

'அச்சா றாக வுணரிய வருபவன்

பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல்' (கலி. 75,

என்பதும் அது. இது.

'ஐயர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ்

செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்' (தொல். கற்.5)

தலைமகள் கருத்தின்கண் நிகழுங் குறிப்பென்பது.

2. புனை யறத் தெளிதலென்பது, தனக்கொத்த இல்லறம் இன்னதென்று தலைமகள் மனத்துப் படுதல் அது,

'விரியுளைக் கலிமான் தேரொடும் வந்த

விருந்தெதிர் கோடலின் மறபட லென்றும்" (கவி. 75)

என வரும்; இஃது அவனொடு சொல்லாடாது ஊடியிருப்பேனா யின் விருந்துகொண்டு புகுதரும்; அதனால ஊடலைமறப்பே னென்றமையிற் புரையறந் தெளிதலாயிற்று.

3. இல்லது காய்தலென்பது, கனவின்கட்போலாது தலை மகற்கு இல்லாததனை உண்டாக்கிக்கொண்டு காய்தல். அது.

'நற்றா ரகலத்துக் கோர்சார் மேவிய

நெட்டிருங் கூந்தற் கடவுள ரெல்லார்க்கும் முட்டுப்பா டா சுலு முண்டு' (கவி. 93)

என வரும்; இது கடவுளரையே கண்டு தங்கினானாயினும் நெட்டிருங்கூந்தற் கடவுளரையே கண்டாயென்று இல்லது சொல் விக் காயுமாகலின் அப்பெயர்த்தாயிற்று.