பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் நூற்பா -

பிறவாத நகையுமுள’. அவை வறிதகத் தெழுந்த வாயன் முறு வலள் (அகம். 5) என்றாற்போல வருவனவெனக் கொள்க. (ச)

பாரதியார்

கருத்து :- இது, முன் சிறந்த செய்யுட்பொருளாம் எண்ணான்குணர்வும் கண்ணியபுறனே நானான்காய்ப் பண்ணைத் தோன். றும் 'அப்பாலெட்டே மெய்ப்பாடு' எனத் தொகுத்தவற்றுள், முதல் தொகுதியாம் நகை வகை நான்கும் அவற்றினியல்பும் கூறுகிறது.

பொருள் :- எள்ளல்=நகைமொழி அதாவது கேலி: இளமை= மழவு; அஃதாவது பிள்ளைத் தன்மை: பேதைமை= அறிவின்மை: மடன்=ஏழைமை; அஃதாவது தேராது எளிதில் நம்புமியல்பு: என்று உள்ளப்பட்ட நகை நான்கென்ப-இந்நான்கும் நகையின் வகைநான்காய்க் கருதப்படு மென்பர் (உள்ளுறும் உணர்வை நுண்ணிதி னுணரும் புலவர்.)

குறிப்பு : -எள்ளல், இழித்தலின் வேறுபட்ட நகைமொழி; பழிப்பில் பரிகாசம், விளையாட்டேச்சுப் போல்வது. "இளரிவு' பின் சூத்திரத்தில் அழுகைவகைத்தாய் வேறு கூறப்பெறுதலின், இங்கு நகைவகையுளொன்றெனப்படும் எள்ளல் இழியாச் சிரிப்பாதல் தேற்றம்.

'ஊரன், எம்மிற் பெருமொழிகறித் தம்இல்

கையும் காலும் தூக்கத் துக்கும் ஆடிப் பாவை போல, மேவன செய்யும் தன்புதல்வன் தாய்க்கே"

எனும் ஆலங்குடி வங்கனாரின் குறும்பட்டில் (குறுந்.8) காதற். பரத்தை, தான் காதலிக்கும் வள்ளற்றலைவனை எள்ளுவதறிக.

5. உள்ளப்பட்ட ககை . எள்ளல் முதலிய உள்ளக் குறிப்புக்காரணமாகத் தோன்றிய க.ைக. உள்ளத்தொடு பிறவாத ககையாவது, மேற்குறித்த எள்ளல் முதலியன காரணமாதலின்றிப் புறத்தே தோன்றும் முதுவலிப்பு.

1. எள்ளல் ககை இழிவு குறிப்பதன் து, விளையாட்டுப்பற்றியது என்பது கருத்து