பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் துற்பா சு இக் பாரதியார்

கருத்து :- இஃது இளிவரல் எனும் மெய்ப்பாடு வகை ந - ன்கும் அவற்றின் பொதுவியல்பும் குறிக்கின்றது: * 莎 ( ~ தி பும் கு து

பொருள்:- மூப்பு = முதுமை; பிணி = நோய் வருத்தம் = இடுக்கண், அதாவது அல்லல்; மென்ம்ையொடு - எளிம்ை.

அஃதாவது நொப்ம்மையுடன்; யாப்புறவந்த இளிவரல் நான்கேதொடர்ந்து படரும் மானக்குறை நான்குவகைத்தாம்.

குறிப்பு:-மென்மை, இங்கு மிருதுத்துவம் குறியாது இகழ்ச்சிக்காளாக்கும் எளிமை அதாவது நொய்ம்மைப் பொருட் - டாம். இளிவரல், மானம் குன்ற வருவது. "இனிவரின் வாழாக மானமுடையார்' எனவும், 'இடுக்கண் வரினும் இனிவந்த செய்யார்" எனவும் வருதலான், இளிவரல் இபபொருட்டாதல் தெளிக. முன் அழுகை வகையுள் ஒன்றாகச் சுட்டப்பட்ட இளிவு அவலிக்கும் அவமதிப்பைக் குறிக்கும் அது பழிபடு குற்றமின்றியும் பிறரிகழ்வாற் பிறக்கும் பெற்றியது; எனவே, இளிவு தன்னெஞ்சு சுடுதலின்மையால் வாழ்வில் வெறுப்பு விளையாது. முன் சூத்திரத்திலிதை இளிவென்னாது இழிவென்றே இளம்பூரணர்கொண்ட பாடத்தானும் இவ்வுண்மை வலி யுறும். இச் சூத்திரம் சுட்டும் இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்றவரும் பழிநிலையைக் குறிக்கும்.'

'தண்ணந் துறைவற் றொடுத்து நந்நலம் கொள்வாம் என்றி தோழி! கொள்வாம் இடுக்க ணஞ்சி யிரந்தோர் வேண்டிய 'கொடுத்தவை தா' என் சொல்லினும்

இன்னா தோ? நம் இன்னுயி ரிழப்பே' (குறுந் 349) பகுப்பைக் கோழித் தனிப்போர் போல

விளிவாங்கு விளியி னல்லது களைவோ ரிலையt னுற்ற் நேர்யே’ (குறுந் 305) 'இதுமற் றெவனோ தோழி! துணியிடை

1. இளிவரல் என்பது, மானம் குன்றவரும் தாழ்வு என்பது 'இனிவரின் வாழ்ாத மானமுடையார் எனவும் இடுக்கண் வரினும் இளிவந்த செய்யார் எனவும் வரும் திருக்குறள் தொடர்கள்ாற் புலனாம். இதுகொண்டு 'இச்சூத்திரம் சுட்டும் இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்றவரும் பழிகிலையைக் குறிக்கும் என விளக்கங்தருவர் காவலர் பாரதியார்,