பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

希萼 தொல்காப்பியம்-டெய்ப்பாட்டியல்

'சொல்லப்பட்ட பெருமித மென்றதனாற் காமம்பற்றியும் பெருமிதம் பிறக்குயென்று கொள்க.

"பல்லிருங் கூத்தன் மகளிர்

ஒல்லா முயக்கிடைக் குழைகவென் தாரே (புறம். 73)

என்பது காமம்பற்றிய பெருமிதம். பிறவும் வருவன உளவேற் கொள்க இது தன்கட் டோன்றிய பொருள்பற்றி வரும் என்னை? கல்வியுந் தறுகண்மையும் இசைமையும் வேட்கையுங் கொடைத் தொழிலுத் தன் கண்ணவாகலின், {க }

பாரதியார்

கருத்து :- இது, பெருமித வகையும் இயல்பும் கூறுகிறது.

பொருள் :- கல்வி முதல் கொடையிறாக நான்கும் புகழத் தக்க பெருமித வகையாம்.

குறிப்பு :- பெருமிதம், வெறுப்புக்குரிய செருக்கன்று; வீறு தரும் தருக்காகும்; எனவே, புகழ்க்குரிய பெருமையிற் பிறக்கும் மகிழ்வாம். இதன் பழியில் பெருமைப்பெற்றி தோன்றச் "சொல்லப்பட்ட பெருமிதம்' என விளக்கப்பட்டது. சொல் புகழாதல் வெளிப்படை. ஆகையால் கல்வி, ஆண்மை அதாவது செமமற்றிறல், சீர்த்தி, வள்ளன்மை என்பவை மீக்கூரப பெற்றுப் புகழ்தற்குரிய பெருமை யுணர்வூட்டலின்,

இவை நான்கும் பெருமித வகையாயின.

'என-எண்ணிடைச்சொல். ஈற்றேகாரம அசை தேற்ற. முமாம். (க)

ஆய்வுரை

இது, பெருமிதத்திற்குரிய பொருள் வகையுணர்த்துகின்றது. | இ ன். கல்வி, தறுகண், புகழ், கொடை எனக் கூறப்பட்ட இவை நான் குங் காரணமாகப் பெருமிதம் நால்வகைப்படும். எ-து. பெருமிதமாவது, எல்லோராலும் ஒப்ப நில்லாதது பேரெல்லையாக நிற்றல் என விளக்கந் தருவர் பேராசிரியர். எனவே

சொல் - புகழ் சொல்லப்படுதலாவது உயர்த்துப் புகழப்படுதல்.