பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்

இவ்வோத்து என்ன் பெயர்த்தோ எனின், மெய்ப்பாட்டியல் என்னும் பெயர்த்து, மெய்ப்பாடு உணர்த்தினமையாற் பெற்ற பெயர். அஃதியாதோ எனின், முன்னர்க் கூறுதும்.

க. பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்

கண்ணிய புறனே நானான் கென்ப.

என்பது சூத்திரம்.

இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பிறர் வேண்டு. மாற்றால் சுவையுஞ் சுவைக்குறிப்பும் உணர்த்துதல் துதலிற்று.

(இ - ன்.) பண்ணைத் தோன்றிய என்பது - விளையாட் டாயத்தின்கண் தோன்றிய என்றவாறு பண்ணையுடையது பண்ணை என்றாயிற்று.”

எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ய என்பது - முப்பத்திரண்டு பொருளையுங் குறித்ததன்

1. பிறர் என்றது நாடகத்தமிழ் நூலாசிரியரை.

2. பண்ணை - விளையாட்டு. ஈண்டு இச்சொல் ஆகுபெயராய் விளையாட்டி, னையுடைய மக்கள் கூட்டத்தினையுணர்த்திகின்றது என்பார், ‘பண்ணையுடையது பண்ணையென்றாயிற்று' என்றார். ஆயம் - மக்கள்தொகுதி. எண்னான்கு - முப்பத்திரண்டு. அவையாவன ககை முதலிய எண்வகை மெய்ப்பாட்டிற்கும் ஏதுவாகப் பின்னர் எள்ளல் முதல் விளையாட்டிற க நான்கு நான்கு தொகுதி. களாக எண் வகைப்படப் பகுத்துரைக்கப்படுவன. கானான்கு - பதினாறு. எள்ளல் முதல் விளையாட்டி றாகவுள்ள முப்பத்திரண்டு பொருள்களையுங்குறித்து அதன் புறத்து கிகழ்வன என்றது, நகை முதல் உவகையீறாகப் பின்னர் க் கூறப்படும் எண்வகை மெய்ப்பாடுகளுக்குரிய சுவைகள் எட்டும். அவைபற்றிய மனக்குறிப்புக்கள் எட்டும் ஆகிய பதினாறனையும்.