பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 87 யாகிய திருக்குறளை இயற்றியுள்ளார். அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருள்” எனவருந் தொல்காப்பியச் சூத்திரம், அறம், பொருள், இன்பம் என்னும் இம்மூன்றுமே உலகிற் கருதத்தக்க பொருள்கள் என வரையறுத்துக் கூறு கின்றது. இவ்வரையறையினை யடிப்படையாகக் கொண்டே திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலாகத் திருக்குறளை வகுத்தமைத்துள்ளார். அறத்தினற் பொருள் செய்து அப்பொருளால் இன்பம் நுகர்தலே இவ்வுலக வாழ்வின் பயன் என்பது பண்டைத் தமிழாசிரியர் கொள்கை யாகும். இம் முப்பொருளின் வேருக வீடு என்பதொரு பொருள் நான்காவதாக வுளதெனக் கொண்டு புருஷார்த்தம் நான்கென்பர் வடநூலார். அவ்வடமொழி மரபினைப் பின்பற்ருது அற முத லாகிய மும்முதற் பொருளென்னும் தொல்காப்பிய மரபே திருவள்ளுவராற் போற்றி ஏற்றுக்கொள்ளப் பெற்றதாகும், தொல்காப்பியர் வாய்மொழியினை அவ்வாறே எடுத்தாண்ட பகுதிகளும் திருக்குறளிற் காணப்படுகின்றன. எழுத்தெனப்படுப அகரமுதல் னகரவிறுவாய்' எனத் தொல்காப்பியனுள் தமது நூலைத் தொடங்கியுள்ளார். அகரமுதல வெழுத்தெல்லாம்' எனத் தொடங்கிக் கூடி முயங்கப்பெறின் என னகர விறுவாய்த் திருக்குறளை முடித்தார் திருவள்ளுவர். நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்துங் கலந்த மயக்கம் உலகம் என்ருர் தொல்காப்பியர். சுவையொளி யூறேசை நாற்றமென் றைந்தின், வகைதெரிவான் கட்டேயுலகு என்ருர் திருவள்ளுவர். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திர மென்ப என வருந் தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றி யமைந்ததே 'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து, மறைமொழி காட்டி விடும் என வருந் திருக்குறளாகும். பெருங்காஞ்சி யென்னுந் துறையினை விளக்கக் கருதிய தொல்காப்பியனுர், மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை என அதன் இயல்பினைப் புலப்