பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器器 தொல்காப்பியம் படுத்தியுள்ளார். "மாற்றுதற்கு அரிய கூற்றம் வருமெனச் சொல்லப்பட்ட பெருங்காஞ்சி" என இத்தொடர்க்கு இளம்பூரணர் பொருள் கூறுவர். ஒருவராலும் விலக்குதற்கரிய கூற்றம் வரு மென அறிவுறுத்தலைப் பெருமை யென்ற சொல்லாற் குறிப் பிடுதல் தொல்காப்பியர் கருத்தாதல் பெறப்படுகின்றது. இக் கருத்தினை நெருநல் உளனுெருவன் இன்றில்லை யென்னும், பெருமை யுடைத்திவ் வுலகு என்ற திருக்குறளால் தி வள்ளுவர் விளக்குகின்றர். இந்நிலையாமையே உலகின் மிக்கதாதல் பற்றிப் பெருமை யெனப்பட்டது என்பர் பரிமேலழகர் மாற்றருங் கூற்ற முண்மை தெரிந்தோர் பெருமிதமின்றி யடங்கியொழுகுவ ராதலின் அவ்வொழுக்க முடையார் வாய்மொழியைப் பெருமை யென்ரு ரெனினும் அமையும். மாற்றருங்கூற்றம்' என்னுந் தொல்காப்பியத் தொடர் பொருளைக் கூற்றங் குதித்தலுங் கைகூடும், என்ற தொடரில் எதிர்மறையும்மையால் திருவள்ளுவர் குறிப்பாக உணரவைத்தமை ஈண்டு நினைத்தற் குரியதாம். 'அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி எனவருந் தொல் காப்பியத் தொடர்ப் பொருளை அருளென்னும் அன்பீன் குழவி எனவருந் திருக்குறள் இனிது புலப்படுத்துவதாகும். தான் கூற. வெடுத்துக்கொண்ட பொருளைப் பிறர் உணரும் வாயிலறிந்து உணர்த்தவல்லயிைன் இச்சொல் இப்பொருளையுடையது எனத் தான் கூறக் கருதிய பொருள் திரிபின்றி இனிது விளங்கும் என்பதனை, "பொருட்குத் திரிபில்லே யுணர்த்த வல்லின்" என்ற சூத்திரத்தாலும், சொற்பொருளை உணர்த்தும் நெறி கேட்போரது உணர்வினைப் பற்றுக்கோடாகவுடையது என்பதனை 'உணர்ச்சிவாயில் உணர்வோர் வலித்தே" என்ற சூத்திரத் தாலும் தொல்காப்பியனர் விளக்குவர். தான் கருதியன அரிய பொருளாயினும் பிறர்க்கு எளிதிற் புலகை எடுத்துரைக்கும் ஆற்றலும், பிறர் கூறுவன உணர்தற்கரியனவாயினும் அவற்றை