பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 93 ஐகாரத்தின் பின் இயல்பாய் வரும் நகரத்துடன் ஞகரம் போலியாய் நிற்கும் மரபு, பைஞ்ஞலம் (31) எனப் பதிற்றுப் பத்திலும் பைஞ்ஞனம் என 177-ஆம் புறப்பாடலிலும் காணப் படுகின்றது. பிற்காலத்திற் பெருகி வழங்கும் இவ்வெழுத்துப் போலியைப் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் இல்லை. நான்கு என்னும் சொல் 104-ஆம் அகப்பாடலில் நால்கு எனத் திரிந்து வழங்கியுள்ளது. நான்கு, நால்கு எனவருந் திரிபு தொல் காப்பியத்திற் சொல்லப்படவில்லை. ஒன்று முதல் பத்து, நூறு, ஆயிரம், நூருயிரம் வரையுள்ள எண்களுக்குத் தொல்காப்பியர் புணர்ச்சி விதி கூறியுள்ளார். நூறுநூருயிரமாகிய கோடியென்னும் எண்ணினைக் குறித்த புணர்ச்சி விதியைப்பற்றி இகரiற்றுப் புணர்ச்சியில் குறிப்பிடுதல் முறையாகும். அங்ங்னமாகவும் தொல்காப்பியனர் இவ்வெண் ணினப்பற்றி யாண்டும் குறிப்பிடாது போயினர். எனவே கோடி யென்னும் எண் அவர் காலத்தில் தோன்றி வழங்கவில்லையெனத் தெரிகிறது. ஒன்றுபத்தடுக்கிய கோடி கடையிfஇய, பெருமைத் தாக நின் ஆயுள்தானே (புறம்-18) எனவும், கோடியாத்து நாடு பெரிது நந்தும் (புறம்-184) எனவும், கோடி தொகுத்தார்க்கும்' (குறள்-377) எனவும் கருதுப கோடியுமல்ல பல (குறள்-337) எனவும் கோடி என்னும் எண் கடைச்சங்க காலத்திற் பயின்று வழங்கக் காண்கின்ருேம். ஆசிரியர் தொல்காப்பியனர் காலத்தில் கோடி என்னும் இகரவீற்று எண்ணுப்பெயர் வழங்கியிருக்கு மானுல் ஏனைய எண்ணுப் பெயர்களுக்குப் புணாச்சி விதி கூறியது போன்று இதற்கும் விதி கூறியிருப்பர். தொல்காப்பியனர் இவ் வெண்ணுப் பெயரினைக் குறிப்பிடாமையால் அவர் காலத்துக்குப் பின்வந்த தமிழறிஞர்களாலேயே இவ்வெண்ணுப் பெயர் படைத்து வழங்கப்பெற்றதென்பது உய்த்துணரப்படும் நன்னல்குன்ட் கடும்ப நெடுந்தே (அகந்.ை