பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##2 தொல்காப்பியம் துள்ளாரென்றும், லகஷ்ணம் என்பது வடமொழியிற் குறியெனவும் பொருள்படுமாதலின் தொலகாப்பியனுர் உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக் கொள்ளுமென்ப குறியறிந்தோரே' என்ற சூத்திரத்தில் குறி யென்னும் சொல்லால் இப்பொருளே வழங்கியுள்ளாரென்றும், இவ்வாருகத் தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் கருத்துக்களை வெடுத்தாண்டுள்ளமையால் இவர் பதஞ்சலியின் காலமாகிய கி. மு. 150-க்குப்பின் வாழ்ந்தவ ரென்பது அறுதியான முடியாகுமென்றும் அறிஞர் பிள்ளையவர்கள் துணிந்துரைத்துள்ளார்கள். பதஞ்சலி முனிவர் கி. மு. 150-இல் வாழ்ந்தவரென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாதல்கூடும். ஆனல் தொல்காப் பியனர் பதஞ்சலிக்கு முற்பட்டவரா பிற்பட்டவரா என்பதே இங்கு ஆராய்ந்து துணிய வேண்டிய செய்தியாகும். பதஞ்சலி மாபாடியத்திலும் தொல்காப்பியத்திலும் ஒத்த கருத்துக்கள் சில காணப்படுமாயின் அவற்றின் ஒப்புமையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வருதல் கூடாது. என்ன? இவ் வொப்புமைகளைக் காட்டிப் பதஞ்சலி முனிவர் சொல்லிய வற்றையே தொல்காப்பியஞரும் சொன்னர் என அறிஞர் பிள்ளை யவர்கள் துணியுமாறுபோன்றே தொல்காப்பியகு கருத்துக் களையே பதஞ்சலியும் தமது மாயாடியத்தில் எடுத்தாண்டுள்ளார் எனத் துணிதற்கும் இவ்வொப்புமையிடந்தருமாதலின் என்க. முன்மொழி நிலையல், பின்மொழி நிலையல், இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையல், அம்மொழி நிலையாது அன்மொழி நிலையல் எனத் தொகைச் சொற்களின் பொருள் நிலைகளை நெடுங் காலத்திற்கு முன் வகைப்படுத்தியவர் ஆசிரியர் தொல்காப்பிய ஞரேயாவர். மோரியர் ஆட்சிக் காலத்தும் அவர்க்கு முன்னும் தோன்றிய தமிழ்ச் செய்யுட்கள் யாவும் தொல்காப்பியத்திற்குக் காலத்தாற்பிற்பட்டனவென்பது நன்கு புலனுதலின் தொல்காப்பிய ஞர்க்கு நெடுங்காலம் பிற்பட்டவர் பதஞ்சலி முனிவர் என்பது