பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 1#3 நன்கு விளங்கும். பதஞ்சலியார் தென்னுட்டில் வாழ்ந்தவரென் பது அவர்தம் வரலாருக வழங்கும் செய்திகளாற் பெறப்படும். தென்னுட்டில் வாழ்ந்த பதஞ்சலியார் தென்றமிழ்த் தொன்னூ லாகிய தொல்காப்பிய மரபினையறிந்து அந்நூலிற் சொல்லப் பட்ட இலக்கணங்களுள் வடமொழி இலக்கண மரபுக்கு ஏற்பன சிலவற்றை உய்த்துணர்ந் தெடுத்துத் தமது மாபாடியத்திற் குறிப்பிட்டிருத்தல் பொறுத்தமுடையதேயாம் மேலெடுத்துக் காட்டிய தொகைகளின் பொருள் நிலைபற்றிய பதஞ்சலிவாக்கியம் அவைதாம் முன்மொழி நிலையலும், எனத் தொடங்கும் சூத்திரப் பொருளைக்கொண்டு கூறியதெனக் கோடல் தவருகாது. இச் சூத்திரத்தில் என்ப' எனத் தொல்காப்பியனுராற் குறிக்கப் பட்டோர் பண்டைத்தமிழ் நூற்புலவர் எனக் கொள்ளுதல் வேண்டும். இலக்கணம் என்றசொல்லை முதன்முதல் வழங்கியவர் தொல்காப்பியனரேயாவர். இவ்வாசிரியர் வழங்கிய இலக்கணம் என்ற சொல் லக்ஷண என்ற வடசொல்லின் திரிபன்ரும். கொள்ளுமென்ப குறியறிந்தோரே என்புழிக் குறியென்ற சொல்லை லக்ஷண என்ற வடசொல்லின் மொழிபெயர்ப்பாக ஆசிரியர் குறித்திலர். குறி' என்பது நூல் என்னும் பொருளில் வழங்கும் பழந்தமிழ்ச் சொல்லாகும். ஒரு குறிகேட்போன் இரு காற் கேட்பின் பெருக நூலிற் பிழைபாடிலனே' என்புழிக் குறி யென்னும் சொல் நூல் எனப் பொருள் தருதல் காண்க. 'வியாகரணம் என்னும் சொல், பகுத்துணர்த்தும் சொல் லிலக்கணம் என்ற பொருளில் வழங்குவதாகும். இலக்கணம் என்ற சொல், பல பொருளே யுய்த்துணர்ந்து அவற்றின் இயல் பினை உள்ளவாறு அறிவித்தற்குக் காட்டப்படும் வரையறை என்ற பொருளிலேயே தொல்காப்பியனரால் ஆளப்பெற்றுளது. இத்தமிழ்ச் சொல்லோடு ஒருபுடை ஒசையொற்றுமையுடைய லக்ஷணம் என்ற வடசொல்லைப் பாணினி முதலிய வடமொழி