பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 தொல்காப்பியம் ஊழின் இயல்பினை எடுத்துரைத்தலால் அவ்வூழுக்குக் காரண மாகிய மறுபிறப்புண்டென்பதும் அவர் தமக்குடன்பாடாதல் நன்கு பெறப்படும். இல்வாழ்க்கையினைக் களவும் கற்பும் என இருவகைப் படுத்துணர்த்திய ஆசிரியர், கணவனும் மனைவியுமாக இல்லறம் நிகழ்த்திய இருவரும் இன்பநுகர்ச்சியெல்லாம் குறைவறநுகர்ந்து மனவமைதிபெற்ற நிலைமைக்கண் மனையறத்திற்குப் பாதுகாவ லாகிய மக்களால் நிறைந்து அறத்தையே புரியும் சுற்றத்தாருடன் உயிரினுஞ் சிறந்த செம்பொருளின் இயல்பினை அறிஞர்பாற் கேட்டு ஒருநெறியமனம் வைத்து உணர்ந்து போற்றுதலே இதுவரையும் தாம் அன்பினல் நிகழ்த்திப்போந்த இல்லறத்தின் முடிந்த பயனும் என்பதனைக், 'காமஞ்சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்த தன் பயனே' எனவருங் கற்பியற் சூத்திரத்தால் முடிபொருளாக அறிவுறுத்துவா ராயினர். 'என்னிலும் இனியான் ஒருவன் உளன்' என்று பெரியோர் கூறியவாறு எல்லாவுயிர்க்கும் உயிர்க்குயிராய்ச் சிறந்து விளங் குதல் இறைவனது இயல்பாதலின் உயிர்கட்குத் தோன்ருத் துணையாய் நின்றுதவும் சிறப்புடைய கடவுளைச் சிறந்தது என்ற பெயரால் தொல்காப்பியனர் அழைத்தார். தோற்றக்கேடுக ளின்றி என்றும் உள்ளதாய்த் தன்பால் ஒன்றும் ஊடுருவ இயலாமையால் தூய்மையுடையதாய்த் தனக்கு எத்தகைய விகாரமும் இன்றி என்றும் ஒரு பெற்றியதாய் நிற்றல் முழுமுதற் பொருளின் இயல்பாதல்பற்றி அதனைச் செம்பொருள், என்ற சொல்லால் திருவள்ளுவர் வழங்கியுள்ளார். சிறந்தது எனத்