பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 தொல்காப்பியம் இங்ங்ணம் ஆசிரியர் தொல்காப்பியனர் தம் காலத்தில் தமிழகத்தில் நிலவிய வழிபாட்டு முறைகளையும் சான்ருேள் கொள்கைகளையும் தம் நூலில் ஒத்த மதிப்புடன் எடுத்துரைத்து விளக்குதலால் அவ்வாசிரியர் பல்வேறு வகையில் நிகழும் எல்லா வழிபாடுகளையும் ஏற்றுக்கொள்ளும் முழுமுதற்பொருள் ஒன்றே என்னுந் தெளிவுடைய கொள்கையினரென்பது நன்கு தெளியப் கடும். தொல்காப்பியத்திற் சுட்டப்படும் மாயோன், சேயோன் கொற்றவை முதலிய தெய்வ வகையினுள் தொல்காப்பியனர் இன்ன தெய்வத்தைச் சிறப்பு முறையில் வழிபட்டார் எனத் துணிந்து கூறுதற்கு இயலவில்லை. இத்தெய்வங்களுள் மாயோன இவ்வாசிரியர் தலைமையாகக்கொள்வர் என்றும், புணர்தல் முதலிய உரிப்பொருட்குரிய முறையில் வையாது மாயோன் மேய காடுறை யுலகம் என முல்லை நிலத்தை முதலிற் கூறியது மாயோன் மேவிய தன்மையாலென்று துணியலாமென்றும், "மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலை என்பதல்ை மன்பெருஞ் சிறப்பினையும் தாவா விழுப் புகழினையும் மாயோற்கு ஏற்றிக் கூறுதலால் இவ்வியல்பு நன்கு புலனுமென்றும் அறிஞரொருவர் கூறியுள்ளார். மாயோன் முதலாக எண்ணப்பட்ட நிலத்தெய்வங்களின் வேருக எல்லா நிலத்திற்கும் பொதுவாகிய நிலையில் வழிபடுதற்குரிய முழுமுதற் பொருளைக் கடவுள் என்ற பொதுச் சொல்லால் ஆசிரியர் குறிப் பிடுதலானும் மாயோன் முதலிய தெய்வ வழிபாடுகளை ஒவ்வொரு நிலத்திற்கேயுரிய கருப்பொருள்களுள் ஒன்ருக ஆசிரியர் அடக்கிக் கூறுதலானும், முருகவேள் வழிபாட்டின் சிறப்பினை வெறியறி சிறப்பு என்றும் கொற்றவை வழிபாட்டின் பயனுகவுளதாம் தறுகண் உணர்வினைச் சிறந்த கொற்றவைநிலை என்றும் மாயோன் வழிபாட்டுடன் இவற்றையும் ஒத்த மதிப்புடன் ஆசிரியர் 1. தமிழ் வரலாறு, பக்கம், 279.