பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

备 தொல்காப்பியம் துதலியபொருள் பினை நன்கறிந்த தமிழ் முன்ளுேர் இம்மூன்றினையும் சார்பெழுத் தெனப் பெயரிட்டு வழங்கினர்கள். சார்ந்துவரன் மரபின்மூன்று எனவும், சார்ந்து வரினல்லது தமக்கியல்பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் எனவும் வருந் தொடர்களால் தொல்காப்பியனர் இவற்றின் இயல்பினைத் தெளிவாக விளக்கு អ៊ិលិរញធំ. தனித்தியங்கும் இயல்புடையது உயிர். அவ்வியல்பின்றி உயிரிஞல் இயக்கப்படுவது மெய். அகர முதல் ஒளகார மீருக வுள்ள பன்னிரண்டெழுத்தும் தனித்தியங்கும் ஆற்றலுடைமையால் உயிரெனப்பட்டன. ககர முதல் னகர மீருகவுள்ள பதினெட் டெழுத்துக்களும் தனித்தியங்கு மியல்பின்றி அகர முதலிய உயிர் களால் இயக்கப்படுதலின் மெய்யெனப்பட்டன. உயிர்வழியா யடங்கி அதனது விளக்கம் பெற்று நிற்கும் உடம்பைப் போன்று மெய்யெழுத்துக்களும் தம்மேல் ஏறிய உயிரெழுத்தின் மாத்திரைக் குள் அடங்கி அதன் ஒலியோடு ஒத்திசைப்பனவாகும். இங்ங்ணம் மெய்யும் உயிரும் கூடியொலிக்கும் எழுத்தொலியினை உயிர் மெய் என்ற நிறையுவகப் பெயரால் வழங்குதல் பழைய தமிழ் វោ ឯវើឆ្មបំ. இவ்வியலில் 33 சூத்திரங்கள் உள்ளன. எழுத்தின்னதென்ப தும், அதன் வகையும், எழுத்துக்கள் பெறும் மாத்திரையும், அவற்றுட் சிலவற்றின் வடிவம், குற்றெழுத்து, நெட்டெழுத்து, உயிர், மெய், உயிர்மெய், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடை யெழுத்து, என அவை பெறும் பெயர்களும், மெய் தன்னெடும் பிறிதொடும் கூடியொலிக்கும் மெய்மயக்கமும், குற்றெழுத்துக் களுள் அ இ உ என்பவற்றுக்குச் சுட்டென்னுங் குறியும் நெட் டெழுத்துக்களுள் ஆ, ஏ, ஓ என்பவற்றுக்கு வினவென்னுங் குறியும், எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையின் நீண்டொலிக்கு மிடமும் இவ்வியலில் உணர்த்தப்பட்டன.