பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தொல்காப்பியம் நுதலியபொருள் எண்ணும் முறையில் அமைந்த சொற்களது தொடர்ச்சி எண்ணு நிலவகை யெனப்படும். இவ்வாறு மூவகையால் தொடரும் தொடர்மொழிகளெல்லாவற்றையும் பொருள்நிலைமை நோக்கி அல்வழித் தொடரென்றும் வேற்றுமைத் தொடரென்றும் இரு வகையாகப் பகுத்துரைப்பர் தொல்லாசிரியர். பொருளையிடமாகக்கொண்டு நிகழ்வது சொல்லாகும் சொல்லிலக்கணங்கூறக் கருதிய ஆசிரியர் அச்சொல் நிகழ்ச்சிக்கு நிலைக்களகிைய பொருள்களெல்லாவற்றையும் உயர்திணையென வும் அஃறிணையெனவும் இருதிறனுக வரையறுத்து, அப்பொருள் வகைபற்றி நிகழுஞ் சொற்களையும் உயர்திணைச் சொல்லென்றும் அஃறிணைச் சொல்லென்றும் இரு வகையாகப் பகுத்துரைத்தார். திணையென்னும் சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருளாகும். மக்களது நல்லறிவின் பயனுயமைவது ஒழுக்கம். விலங்கு முதலிய சிற்றுயிர்களினின்றும் மக்கட் குலத்தாரை உயர்திணையெனச் சிறப்பித்துஉயர்த்துவது மனவுணர்வின்பாற்பட்ட நல்லொழுக்கமே யாம். உலக வாழ்வில் மேன்மேல் உயர்ச்சி யடைதற்குக் காரண மாகிய இவ்வொழுக்க வுணர்வு மக்கட் குலத்தாரிடமே சிறப்பாக அமைந்து வளர்தல் கருதி அவர்களை உயர்தினையெனத் தனிச் சிறப்புடைய தொகுதியாகவும், நன்றுந்தீதும் பகுத்துணர்ந்தொழு கும் நல்லறிவு வாய்க்கப்பெருத மற்றைய வுயிர்களையும் உயிரல் பொருள்களையும் ஒழுக்க வுணர்ச்சிக்குரியவல்லாத அஃறிணை யெனச் சிறப்பில்தொகுதியாகவும் முன்னைத் தமிழாசிரியர் பகுத்துள்ளார்கள். இங்ஙனம் உலகப் பொருள்களெல்லாவற்றை யும் உயர்திணை, அஃறிணை என இரண்டாக அடக்கி அவற்றை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து பால்களாகப் பகுத்து இப்பொருள் வேறுபாட்டினை விளங்க அறிந்து கொள்ளுதற்குரிய சொல்லமைப் பினையுடைய தாக நம் முன்னேர் தம் தாய்மொழியாகிய தமிழ்மொழியை உருவாக்கி வளர்த்தார்கள். இவ்வாறு சொற்களின் வாயிலாகத்