பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுமையியல் 39 ஏற்ற விடையாகாதது செப்புவழு. வினவுதற்குரியதல்லாத பொருளைப்பற்றி வருவது வினவழு. ஒருபொருட்குரிய வழக்குச் சொல் மற்ருெரு பொருள்மேற் சென்றது மரபுவழு. இங்ங்ணம் திணை, பால், இடம், காலம், செப்பு, வி,ை மரபு என்னும் இவ்வேழு வகையாலும் சொற்கள் வழுவாமற் காத்தலே வழுக் காத்தலெனப்படும். வழுவற்கவென்றலும், வழுவமைத்தலும் என வழுக்காத்தல் இருவகைப்படும். குறித்த பொருளே அதற்குரிய சொல்லாற் சொல்லுகவென்றல் வழுவற்க வென்றலாம். குறித்த பொருளுக்குரிய சொல்லன்ருயினும் ஒருவாற்ருல் அப்பொருள் தருதலின் அமைத்துக்கொள்க என அமைதிகூறுதல் வழுவ மைத்தலாகும். இவ்வியலின் கக-ஆம் சூத்திர முதலாகவுள்ள சூத்திரங்கள் மேற்கூறிய இருவகையானும் வழுக்காப்பனவாம். வேற்றுமையியல் வேற்றுமை யிலக்கணம் உணர்த்தினமையால் இது வேற்றுமை யியலென்னும் பெயருயடையதாயிற்று. கிளவியாக் கத்துள் பெயர், வினை, இடை, உரியென்னும் நான்கு சொற்கும் பொதுவிலக்கணமுணர்த்தினர். அப்பொதுவிலக்கணத்தினைத் தொடர்ந்து அவற்றது சிறப்பிலக்கணங்கூறுதல் முறை. ஆயினும் வேற்றுமையென்பன ஒருசார் பெயரும் இடைச்சொல்லுமாதலின் அவற்றின் இலக்கணமும் பொதுவிலக்கணமாதல் கருதிக் கிளவி யாக்கத்திற்கும் பெயரியலுக்குமிடையே வேற்றுமையிலக்கணம் உணர்த்த எடுத்துக்கொண்டார். வேற்றுமை யிலக்கணமென்பது ஒன்ருயினும் சிறப்புடைய எழுவகை வேற்றுமைகளும் அவற்றது மயக்கமும் எட்டாவதாகிய விளிவேற்றுமையும் தனித்தனி யியல் களால் உணர்த்துதற்குரிய பொருள்வேறுபா டுடைமையின் அவற்றை முறையே வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல் விளிமரபு என மூன்றியல்களால் உணர்த்தினர்.