பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தொல்காப்பியம் நுதலியபொருள் வேற்றுமையியற் பகுதியைப் பதினேழு சூத்திரங்களாக இளம்பூரணரும், இருபத்திரண்டு சூத்திரங்களாகச் சேவைரை யரும் நச்சிஞர்க்கினியரும், இருபத்தொரு சூத்திரங்களாகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரைகூறியுள்ளார்கள். பெயர்ப்பொருளை வேறுபடுத்தும் உருபுகள் வேற்றுமை யெனப்பட்டன. செயப்படுபொருள் முதலியனவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துணர்த்தலின் வேற்றுமையாயின எனவும் செயப்படுபொருள் முதலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருள் மாத்திர முணர்த்தலின் எழுவாயும் வேற்றுமையாயிற்று எனவும் கூறுவர் சேனவரையர். பொருண்மை சுட்டல் முதலிய ஆறு பொருளையுங் குறித்து அவற்ருல் தான் வேறுபட நிற்றலானும் முடிக்குஞ்சொல்லைத் தான் விசேடித்து நிற்றலானும் எழுவாயும் வேற்றுமையாயிற்று" என்பர் நச்சினர்க்கினியர். ஒரு பொருளை ஒருகால் வினைமுதலாக்கியும் ஒருகாற் செயப்படு பொருளாக்கியும் ஒருகால் ஏற்பது ஆக்கியும் ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும் ஒருகால் உடையது ஆக்கியும் ஒருகால் இடமாக்கியும் இவ்வாறு தம்மையேற்ற பெயர்ப்பொருளை வேறு படுத்தினமையால் வேற்றுமையெனப்பட்டன என்றும், மேல் கிளவி யாக்கத்தால் அல்வழித்தொடர் கூறி இனி வேற்றுமைத்தொடர் கூறுகின்ருரென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளிஎன வேற்றுமை யெட்டென்ருர் தொல்காப்பியர்ை. வேற்றுமை ஏழெனக் கொள் வோர் விளிவேற்றுமையை எழுவாயுள் அடக்குவர். பிறிதோர் இடைச்சொல்லையேலாது இயல்பாகியும் தானே திரிந்தும் நிற்கும் பெயரின் இறுதி விளியெனப்படும். படர்க்கைச் சொல்லையும் பொருளையும் முன்னிலைச் சொல்லும் பொருளுமாக வேற்றுமை செய்வது விளி வேற்றுமையாதலின் இதனை எழுவாயுள் அடக் காது வேருகக் கொள்வதே தமது துணியென்பார்,