பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினேயியல் Hö3 மேற்கூறிய வாகைத்திணை கூதிர்ப்பாசறை முதல் காமம் நீத்தபால் ஈருகப் பதினெட்டுத் துறைகளையுடையதாகும். அவற் றுள் முன்னர்க் கூறப்பட்ட ஒன்பது துறைகளும் மறத்துறை பற்றியும் பிற்கூறிய ஒன்பதும் அறத்துறை பற்றியும் நிகழ்வன என்பார், இருபாற்பட்ட ஒன்பதின்றுறைத்தே' என்ருர் ஆசிரியர் காஞ்சித்திணையாவது, தனக்கு ஒப்பில்லாத சிறப்பென்னுஞ் செம்பொருளைப் பெறுதல் காரணமாக யாக்கை, இளமை, செல் வம் என்பவற்ருல் நிலைபேறில்லாத இவ்வுலகியலைப் பற்றிக் கொண்டு அதல்ை உளவாம் பலவகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்றலாகிய ஒழுகலாரும். நில்லாதவற்ருல் நிலை யுடையதனை அடையும் முயற்சியே காஞ்சித்திணை யென்பது தொல்காப்பியனர் கருத்தாகும். காஞ்சியென்னும் திணை பெருந்திணையென்னும் அகத் திணைக்குப் புறணுகும். ஏறியமடற்றிறம் முதலாகிய நோந்திறக் காமப்பகுதி அகத்திணை ஐந்தற்கும் புறயைவாறுபோல, இக் காஞ்சித் திணையும் பல்வேறு நிலையாமையாகிய நோந்திறம்பற்றி வருதலால் அதற்கு இது புறஞயிற்றென்பர் இளம்பூரணர். உலகியலில் நேரும் பலவகைத் துன்பங்களையும் எதிர்த்து நிற்றல் காஞ்சி என்னும் இக்கருத்தினை அடிப்படையாகக் கெர்ண்டே "எதிருன்றல் காஞ்சி யென்னுங் கொள்கையும் பிற்காலத்து உருப்பெருவதாயிற்று. எல்லாப் பொருளினுஞ் சிறந்த சிறப் பென்னுஞ் செம்பொருளைப் பெறுதல் வேண்டி நில்லாத உல கியல்பில் நேரும் பல்வகைத் துன்பங்களையும் பொறுத்துநிற்றல் காஞ்சித்திணை யாதல்போல, ஒன்ருவுலகத்துயர்ந்த புகழைப்பெற விரும்பிப் பலவகையின்னல்களுக்கிடையே பகைவர் சேனையைத் தடுத்து நிறுத்தலாகிய போர்ச் செயலும் காஞ்சித்திணையெனவே கொள்ளத் தக்கதாகும். இவ்வாறு வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறுபட்ட இருவேறு போர்ச்செயல்களாகப் பண்டைநாளிற் கொள்ளப்பட்ட செய்தி வஞ்சியுங் காஞ்சியுந் தம்முள் மாறே