பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#18 தொல்காப்பியம் நுதலியபொருள் என்றும் பிரியா நிலையில் நிறை கடவாது அன்பினுற் கூடும் உள்ளப் புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பியல்பாகும். இதுவே தமிழியல் வழக்கமாகிய களவுக்கும் வடநூல் மணமாகிய கந்தருவத்துக்குமுள்ள உயிர் நிலையாய வேறுபாடாகும். அன் பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம் எனத் தொல்காப்பியனுரும் அன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே' எனப் பிறசான்ருேரும் உள்ளப் புணர்ச்சி யொன்றையே களவுக் குரிய சிறப்பியல்பாக விரித்துரைத்துள்ளார்கள். ஆரிய மண மாகிய கந்தருவத்திற்கும் தமிழர் ஒழுகலாருகிய களவொழுக்கத் திற்கும் உள்ள வேற்றுமையினையும் தமிழியல் வழக்கமெனச் சிறப்பித்துரைக்கப்படும் களவொழுக்கத்தின் துய்மையினையும் ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு, கந்தருவத்திற்கும் களவிற்குமுள்ள வேற்றுமையினை இனிது விளக்குவதாகும். இந்நுட்பத்தினை நன்குணர்ந்தே 'கந்தருவர்க்குக் கற்பின்றியமையவும் பெறும், ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது' என இவ்விரண்டற்கு முள்ள வேற்றுமையினை விளக்கினர் நச்சிர்ைக்கினியர். மகளிரை அஃறிணைப் பொருளாகிய உடைமைபோலக் கருதிப் பிறர்பாற் கேட்டுப் பெறுதலும் கொடராயின் சுற்றத் தார்க்குத் தெரிந்தோ தெரியாமலோ வன்மையினுற் கவர்ந்து சேறலுமாகிய செயல் முறைகளே மனமெனக் கூறும் வழக்கம் தமிழர்க்கில்லை. ஆகவே இத்தகைய பொருந்தா மண முறை களுக்கு வடநூல்களிற்போலத் தமிழ் நூல்களில் இலக்கியங் காணுதலரிது. 'அன்பொடு புணர்ந்த ஐந்திணை யெனவே அதன் முன்னும்பின்னுங் கூறப்பட்ட ஒருதலைக் காமமாகிய கைக்கிளை யிலும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணையிலும் இருவர் பாலும் ஒத்த அன்பினைக் காணுதலரிதென்பது பெறப்படும். இத்தகைய பொருத்தமில்லாத கூட்டுறவுகள் எந்நாட்டிலும் எக்காலத்தும் காணப்படுவனவேயாம். பொருந்தாத செயல்களைக் குறிப்பாகச்