பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் #23 நின்னைப் பிரியேன் எனத் தலைவிக்குத் தெளிவுரை பகர்தலும் ஆகிய எட்டுவகைக் கூற்றும், முன்கூட்டம் பெற்ற இடத்தினையே மீண்டுந் தலைப்பட்டுக் கூடி மகிழ்தலும், தலைமகளைப் பிரிந்த வழிக் கலக்கமுறுதலும், என்றும் நிலை நிற்பதாகிய இல்லறத்தை மேற்கொள்ள நினைந்து மேல் நிகழ்வனவற்றை யெடுத்துரைக்கு மிடத்தும் தன்பால் சோர்வு மிகுதியாலும் காதல் மிகுதியாலும் நேர்வுற்ற பழிபாவங்களை யெடுத்துக்காட்டி இடித்துரைக்கும் உயிர்த் தோழனுகிய பாங்கன் தனது களவொழுக்கத்தையேற்று உடன்பட்டவிடத்தும் தலைமகளால் விரும்பப்பட்ட உயிர்த்தோழியை வாயிலாகப் பெற்று அவளே இரந்து பின்னின்று அவள் கூட்டக் கூடுவேன் எனக் கருதி அவ்விரத்தலை மேற்கொள்ளுமிடத்தும் ஊரும் பேரும் தான் இழந்தன பிறவும் ஆகியவற்றை வினவு முகத்தால் தன் மனக் கருத்துப் புலகைத் தோழியைக் குறை யிரந்து நிற்கும் பகுதியும், தோழி இவன் கூறுகின்ற குறை தலைவியைக் குறித்ததாக விருந்ததென்று அவள்மேல் சேர்த் தெண்னும் நிலையிற் சில கூறலும், பலகாலுஞ் சென்று இரத்த லும் மற்றையவழியும் தலைவன் வருந்திக் கூறுகின்ற சொல்லினத் தலைவியொடு சார்த்திக் கூறுதலின் முன்னுறு புணர்ச்சி முறையே யடைகவெனவும் தலைவி பேதைத் தன்மையள் எனவும் இவ்வாறு ஒழுகுதலாற் கேடுளதாம் எனவும் இவ்வொழுக்கம் நின் பெரு மைக்கு ஏலாது எனவும் கூறித் தோழி தலைவனை அவ்விடத் தினின்றும் அஞ்சி நீக்குதலாலுளதாய வருத்த நிலைமையும் நோக்கி மடலேறுவேன் எனக் கூறுதலும் ஆகிய கூற்றுக்கள் தலைவன்பால் நிகழ்வனவாம். தலைமகளது இளமைப் பண்பினைத் தோழி எடுத்துக் கூறித் தலைவனை அவ்விடத்திருந்து பெயர்த்த வழியும், வருத்தத்தினுல் மெலிகின்றமை கூறியவிடத்தும், தலைமகன் குறையை மறுக்குந் தோழி அன்புதோன்ற நகைத்த நிலையிலும், அவளது உடம்பாட் டினைப்பெற்று மகிழுமிடத்தும், தான் செல்லும் வழியிடை இடையூ