பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1翰 தொல்காப்பியம் யாகிய கூத்தர் குறித்துப் போற்றுகின்ருர். இக்குறிப்பு நுணுகி நோக்குதற்குரிய வரலாற்று நிகழ்ச்சியினைச் சுட்டுவதாகும். களவியலுரைத் தொடக்கத்திற் கூறப்பட்ட நிகழ்ச்சிக்கும் கூத்தர் குறித்தவற்றிற்கும் சிறிது வேறுபாடு காணப் பெறினும், தொல்காப்பியப் பொருளதிகாரம் வழக்கு வீழ்ந்ததும் இறை யனர் களவியல் புதுவதாக இயற்றப்பெற்றதும் ஆகிய செய்திகள் ஒத்துக் காணப்படுகின்றன. பொருளதிகாரம் வல்லாரைக் காணப் பெருமைக்குப் பாண்டி நாட்டிற் ருேன்றிய பன்னீராண்டு வற்கடமே காரணம் என்பது களவியலுரையின் கருத்தாகும். பாண்டி நாட்டில் தொல்காப்பியப் பொருள் மரபு சிதைந்ததற்கு அந்நாட்டிற் ருேன்றிய அரசியற் குழப்பமே காரணம் எனக் கூத்தர் குறிப்பிடுகின்ருர், தம் பாடல்களில் தமிழ் நாட்டின் வரலாறுகளை உள்ளவாறு விரித்துரைக்கும் நோக்கத்தினை மேற் கொண்ட ஒட்டக்கூத்தர் இறையனர் களவியலின் தோற்றத்தைத் குறித்துக் கூறிய இச்செய்தியினை முழுதும் புனைந்துரையெனக் கொள்ளுதற்கு இடமில்லை. களவியலுரை யாசிரியரும் ஒட்டக் கூத்தரும் கூறிய இரு வேறு காரணங்களாலும் தொல்காப்பியப் பொருளதிகார மரபு பாண்டி நாட்டில் வழக்கொழிந்திருத்தல் வேண்டும் எனக் கொள்ளுதல் நேரிதாகும். இங்ங்ணம் பாண்டி நாட்டில் ஆட்சி மாறுபாடு காரணமாகப் பொருளதிகாரமரபு சில காலம் வழங்குதலொழியினும் தமிழ் நாட்டின் ஏனைய பகுதிகளில் அறிஞர்களிடையே தொடர்ச்சியாகப் பயின்று பாடஞ் சொல்லப் பெற்று வழங்கி வந்தது என்னும் உண்மை அந்நூலுக்கு ஈடாக இயற்றப்பெற்ற இறையனர் களவியலால் இனி துணரப்படும். to g இறையரைகப்பொருளும் தொல்காப்பியப் பொருளதிகாரமும் களவியல் நூல் இறைவன லியற்றப்பெற்றதென்னும் கொள்கை இடைக்காலத்தில் வாழ்ந்த பெரியோர் எல்லாரானும்