பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 தொல்காப்பியம் நுதலியபொருள் கணவனை எஞ்ஞான்றும் வழிபட்டொகுதல் மனைவிக்கு இயல்பாகலால், காமவுணர்வு மிக்குத் தோன்றிய நிலையில் தலைவி யைத் தலைவன் பணிந்து கூறுதல் தவருகாது. பிறர் துன்பங் கண்டு உளமிரங்கும் அருளுணர்வைத் தோற்றுவித்த அன்பு பொதிந்த சொற்களை மெய்யே கூறுதல் தலைவிக்குரிய இயல் Llff G9. முற்கூறிய களவொழுக்கத்தினும் அது வெளிப்பட்ட கற் பியல் வாழ்வினும் அலர் தோன்றும். அவ்வலர் மொழியால் தலைவன் தலைவி யிருவருள்ளத்துங் காமவுணர்வு மிக்குத் தோன் றும். இவ்வாறே தலைவனது விளையாட்டும் காமவுணர்வை மிகுதிப்படுத்தும். கணவனும் மனைவியும் சிறிது மனம் வேறுபட்டு ஊடிய காலத்து அவர்தம் பிணக்கத்தைத் தீர்த்து வைத்தற்குரியவர்கள் வாயில்கள் எனப்படுவர். பாணர், கூத்தர் முதலியோர் தலே மகனை எக்காலும் அகலாது நின்று தலைவியினது பிணக்கத்தைத் தீர்க்கும் வாயில்களாக மனைக்கண் பலகாலும் வந்து பழகும் இயல்பினராகலின், இவர்களை அகம்புகல் மரபின் வாயில்கள் என்பர் ஆசிரியர். இவ்வாயில்கள் முன்னிலைப் புறமொழியாகப் பேசுதலும் உண்டு. பின்முறை வதுவையாக மற்ருெருத்தியை மணந்த காலத தும் தன் புதல்வனே வாயிலாகக் கொண்டு செல்லினும் தான் பரத்தமை செய்து ஒழுகியதை நினைந்து தலைவன் நிலைகுலைந்து கலங்குதலும் உரியன். தலைவனைக் கூடிமகிழுங் காலத்தில் தாயைப்போன்று அவனே இடித்துரைத்துத் திருத்தி அவனது மனக் கவலையை மாற்றுதலும் மனைவிக்குரிய கடமையாகும். தலைவனது ஒழுக்கத் திற் சோர்வு பிறவாமற் காத்தல் தலைவியின் கடமையாக நூல்