பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் i33 களிற் சொல்லப்படுதலால். மகனைப் பெற்ற தாயாகிய தலைவி இங்ங்ணம் இடித்துரைக்கும் உயர்வுடையளாதலும் தலைவனது உயர்வாகவே கருதப்படும். எல்லாச் செல்வங்களுக்கும் உரிய தலைவன் இவ்வாறு அன்புடையார்கண் பணிந்தொழுகுதல் இயல்பேயாகும். போர் செய்து பகைவரை வெல்லுதற்குரிய வழி துறைகளை ஆராய்தற்கு இடமாகிய பாசறையின்கண் மகளிரொடு உடனுறை தல் கூடாது. போர்த்தொழிலுதவியிற் பழகிப் புண்பட்ட வீரரை யுயசரித்தலும், இசைபாடி மகிழ்வித்தலும் முதலிய புறத்தொழில் புரியும் புறப்பெண்டிராயின் பாசறையில் இருத்தல் பொருந்துவ தாகும். மனைவாழ்க்கைக்கண் கணவன் மனைவி ஆகிய இருவர்க்கு மிடையே பழகும் எல்லா வாயில்களும் அவ்விருவர்பாலும் அமைதற்குரிய மகிழ்ச்சி நிலையைப் பொருளாகக் கொண்டே உரையாடுதற்குரியர், அவ்விருவரிடத்தும் அன்பு நீங்கிய கடுஞ் சொற்களைக் கூறவேண்டிய செவ்வி நேர்ந்தால் நேர் நின்று கூருது சிறைப்புறமாக ஒதுங்கி நின்று கூறுதல் வேண்டும். தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தவழி இரத்தலும் தெளித்தலும் என்னும் இரண்டிடமுமல்லாத ஏனையிடங்களில் தலைவன் முன்னர்த் தலைவி தன்னைப் புகழ்தல் கூடாது. தலைவன் வினை.வயிற் பிரியுங்கால் தலைவி முன்னர்த் தன்னைப் புகழ்ந் துரைத்தல் பொருந்தும். தலைவன் கூற்றினை எதிர்த்துக் கூறும் உரிமை பாங்கனுக்கு உண்டு. இங்ங்ணம் எதிர்த்துக்கூறும் சொல் எல்லாக் காலத் திலும் நிகழ்வதில்லை; அருகியே நிகழும். துன்பக்காலத்தும் தலைவியை வற்புறுத்தியல்லது தலைவன் பிரிந்து செல்லுதல் இல்லை. வினைமேற்செல்லுங் காலத்துத்