பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் $54, கூட்டி அவனை இடித்துரைத்தலும், தலைவன்பால் தவறுகண்டு புலக்குங்காலத்து அத்தவறுகளோடு கூட்டி இடித்துரைத்தலும் நுண்ணுணர்வுடைய தலைமகளின் இயல்புகளாம் என ஆசிரியர் அறிவுறுத்தினராயிற்று. மகிழ்ச்சியும் புலவியும் என இவ்விரு நிலையும் அல்லாத ஏனைக் காலங்களில் தலைவனைக் கழறுதல், தசைசான்ற சொற்காக்குந் தலைவியின் கடமைக்கு ஊறுவிளைப்ப தாகலின் அங்கனம் இடித்துரைத்தல் கூடாதெனத் தொல் காப்பியனர் விலக்கிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். தலைவன் யாதேனும் ஒரு பருவத்தை யெல்லேயாகக் குறித் துப் பிரிந்தாகை, இருதிங்களை யெல்லையாகவுடைய அப்பருவம் தோன்றிய பொழுதே, அப் பருவம் கழிந்தது போலத் தலைவி கூறுதலும் உண்டு. அவ்வாறு கூறுதல், அறியாமையாலாவது வருத்தத்தினுலாவது மயக்கத்தாலாவது அப் பருவத்திற்குரிய பொருள்கள் மிகுந்து காணப்படுதலாலாவது என இந்நான்கு காரணங்களாலும் நிகழும் என்பர் ஆசிரியர். எனவே இவ்வாறு வருஞ் செய்யுள் காலம் பிழைத்துக் கூறுகின்றதல்ல என இதற்கு விளக்கந்தருவர் இளம்பூரணர். தோழி, தன்னை இரந்து குறைவேண்டிய தலைமகனைச் சேட் படுத்து விலக்கிநிறுத்துதலேயன்றி, மெய்ம்மை கூறுதலும் பொய்ம்மை கூறுதலும் நல்வகையுடைய நயவுரைகளைக் கூறுதலும் என இவ்வாறு பலவகையாலும் படைத்து மொழிதலுண்டு. ஒருவரை யொருவர் உயர்த்துச் சொல்லுதற்குரிய சொல், தலைவன் தலைவியாகிய இருவர்க்கும் ஒக்கும். ஐயுற்றுக் கூறுஞ் சொல் தலைமகனுக்கே யுரியதாகும். தலைமகளுக்கு உற்ற துன்பத்தைத் துடைத்தல், அவளோடு ஒன்றித்தோன்றும் பேரன்பினளாகிய தோழியின் இயல்பாதலின், எதிரதாக் காக்கும் அறிவாகிய உள்ளத்திண்மை அவள்பால்