பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘受母 தொல்காப்பியம் நுதலியபொருள் தலைவி, தலைவனது பிரிவாற்ருது வருந்தியகாலத்து, பிரிந்து சென்ற தலைவனுல் வழியிடைக் காணப்பட்ட கருப்பொருள்களுள் அவன் தலைவியை நினைந்து அன்பு செய்தற்குத் தகுவனவாக அமைந்த சிலவற்றின் நிகழ்ச்சிகளைச் சுட்டி இறைச்சிப் பொருள் படத் தோழி கூறுதலும் தலைவியை வற்புறுத்தும் குறிப்பினதாகும். தலைவியை நோக்கித் தலைவன் பாராட்டிய பாராட்டானது, 'யான் செய்யக் கருதிய பொருளுக்கு இவள் இடையூருவாள் கொல்லோ எனத் தலைவன் தன் மீனத்துட்கொண்ட அச்சத்தை யும் தான் பொருள் ஈட்டுதற் பொருட்டுப் பிரிகின்ற செய்தியினை யும் தலைவிக்கு உறுதியாகப் புலப்படுத்துவதாகும். கற்பின் வழிப்பட்ட தலைமகள் பரத்தையைப் புகழ்ந்து பாராட் டினுளாயினும், அவள் மனத்தகத்தே தலைவைேடு ஊடினதன்மை யுண்டென்பர் நுண்ணுணர்விஞேர். மற்ருெருத்தியைக் குறித்து 'இவள் இத்தன்மையள் எனத் தலைவனுக்குச் சொல்லி, அவ ளிடத்தில் இவன் எத்தன்மையனுயிருக்கின்ருன் என அவனது உள்ளக் குறிப்பினை புணர்தலும் தலைவிக்குரிய இயல்பாகும். தலைவல்ை தாம் அடைந்த துன்பத்தினைப் பரத்தையர் தனக்குக் கூறிய வழியும், தான் அவரது துன்பத்தினை உள்ள வாறு உணர்ந்த நிலையிலும் தலைவியானவள், மகிழ்ச்சியும் புலவி யுமாகிய காலத்தன்றி ஏனைக்காலத்துத் தலைவனது முன்னிலையில் நின்று இடித்துரைத்தல் இல்லை என்பர் ஆசிரியர். எனவே தலை வனுடன் மகிழ்ந்து அளவளாவும் நேரத்தில் அம்மகிழ்ச்சியொடு மோர் உட்பொருள் கொள்ளும் வண்ணம் உள்ளுறை போன்று வருவதும் என இருவகைப் படுமென்பதும், இவ்வீருவகை இறைச்சி களுள் உட்பொருள் தரும் இறைச்சி உள்ளுறை யுவமம் போன்று பொருள் தருவதாயினும் அதற்கும் உள்ளுறையுவமத்துக்கும் பெரிதும் வேறுபாடுண்டென்பதும், ஆராய்ந்துனரும் நல்லறிவுடை யார்க்கு இவற்றிடையமைந்த வேறுபாடு இனிது புலனுமென்பதும் நன்கு விளங்கும்.