பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 தொல்காப்பியம் நுதலியபொருள் களாகும். அச்சமுற்ருன் மனத்தே நிகழும் அச்சம், அவனுடம்பில் தோன்றும் நடுக்கம், வியர்த்தல் முதலிய புறக்குறிகளால் காண் போர்க்குப் புலனுகுந் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று' என்பர் இளம் பூரணர். மெய் - உடம்பு. படுதல் - தோன்றுதல். யடு என்னும் முதனிலைத் தொழிற்பெயர் பாடு என நீண்டு நின்றது. இனி, மெய் என்ற சொல்லுக்குப் பொருளின் உண்மைத் தன்மை எனப் பொருள்கொண்டு, மெய்ப்பாடு என்பதற்குப் பொருளின் புலப்பாடு எனப் பொருள் விரித்தலும் உண்டு. "மெய்ப்பாடு என்பது பொருட்பாடு அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குங் புலப்படு வதோராற்ருன் வெளிப்படுதல். அதனது இலக்கணங்கூறிய ஒத்தும் ஆகுபெயரான் மெய்ப்பாட்டிய லென்ருயிற்று' எனப் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும், மக்களது அகவாழ்வும் புறவாழ்வும் ஆகிய உலகியல் வழக்கிலே புலப்பட்டுத் தோன்றும் இம்மெய்ப்பாடுகளைப் புனைந் துரை வகையாகிய நாடக வழக்கிற்கும் புலனெறி வழக்கமாகிய செய்யுள் வழக்கிற்கும் அங்கமாகக்கொள்ளுதல் தொன்று தொட்டு வரும் தமிழிலக்கண மரபாகும். இம்மரபினை உளங் கொண்ட தொல்காப்பியனுர், இம்மெய்ப்பாடுகளைப் புலனெறி வழக்கமாகிய செய்யுளுக்குரிய உறுப்புக்களுள் ஒன்ருகக் கொண்டு இவ்வியலில் விரித்து விளக்குகின்ருர். இவ்வியல் இருபத்தேழு சூத்திரங்களால் இயன்றதாகும். "பண்ணைத்தோன்றிய முப்பத்திரண்டு பொருள்களையுங் குறித்து அவற்றின் புறத்து நிகழும் பொருள்கள் பதிெைறன்று சொல்லுவர். மேற்சொல்லப்பட்ட பதினறு பொருளும் எட்டாகி 1. மெய்யெனப்படுவது பொருளாதலின்’ (தொல்-உவம இயல். மூதற்குத்திரம். பேராசிரியர் உரை).