பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் 15? யடங்கும் பகுதியும் உண்டு' என மெய்ப்பாடுகளைக்குறித்து நாடக நூலார் கொண்ட பாகுபாட்டினை இவ்வியலின் முதலிரண்டு சூத்தி ரங்களால் தொல்காப்பியனுர் குறிப்பிட்டுள்ளார், பண்ணை என்பது விளையாட்டு என்ற பொருளில் வழங்கும் உரிச் சொல்லாகும்." அச்சொல் விளையாட்டினையுடைய கூட்டம் என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றுள்ளது. பண்ணையையுடையது பண்ணையென்ற யிற்று என்பர் இளம்பூரணர். முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டுங் கேட்டுங் காமம் நுகரும் இன்ப விளையாட்டிலே, நகை முதலிய சுவைகளுக்குக் காரணமாகிய சுவைப்படு பொருள்களும், அவற்றை நுகர்ந்தவழி உளவாம் சுவையும், அச்சுவை பற்றித் தோன்றும் மனக்குறிப்பும், அக்குறிப்பின்வழி மெய்யின்கண் வெளிப்படும் சத்துவமும் ஆகிய இவை சிறந்து தோன்றுதல் இயல்பாதலின், பண்ணைத் தோன்றிய எண்ணுன்கு பொருளும்' எனக் குறித்தார் ஆசிரியர். விளையாட்டாயத்தின்கண் தோன்றிய முப்பத்திரண்டாவன, நகை முதலிய சுவைகளுக்கு ஏதுவாகப் பின்னர்க் கூறப்படும் எள்ளல் முதல் விளையாட்டிருகவுள்ள சுவைப்படு பொருள்கள் எனவும், அவற்றைக் குறித்த புறணுவன வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, நடுவு நிலைமை என்றும், வீரக்குறிப்பு, அச்சக்குறிப்பு, இழிப்புக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, காமக்குறிப்பு, அவலக்குறிப்பு, உருத்திரக்குறிப்பு, நகைக்குறிப்பு, நடுவுநிலைக் குறிப்பு என்றும் சொல்லப்பட்ட பதினெட்டினும் நடுவுநிலைமையும் அதன் குறிப்பும் ஒழித்து ஏனைய பதினறுமாம் எனவும், இவை பதினறினையும் சுவையுள் அடக்கிச் சுவையெட்டும் ஆக்கி நிகழ்தல் உண்டு எனவும் கூறுவர் இளம்பூரணர்.” 1. கெடவரல் பண்ணே ஆயிரண்டும் விளையாட்டு’ (தொல்உரியியல்-23) 2. "மெய்ப்பாட்டுறுப்புத் தான் வகையானே நகை முதலாக உவகை ஈருகக் கிடந்த அப்பகுதி யெட்டாம்; அப்ப துதியெட்டும் விரியானே எள்ளல் முதலாக விளையாட்டு ஈருக இயைபு படல்