பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 1 3 பாடிய இறையனர் எனப் பெயரிய கடைச் சங்கப் புலவரே' இந்நூலாசிரியராயிருத்தலுங்கூடும். இந்நூலின் உரைமுகப்பில் இதற்குத் தெய்வத்தன்மை கற்பித்துக் கூறிய உரைப்பகுதி பின் வந்தோரொருவரால்? இந்நூலைச் சிறப்பித்தல் வேண்டிப் புனைந்தெழுதப் பெற்றதே என ஆராய்ச்சியாளர் துணிந்து கூறுவர். இந்நூலின் உரைப்பகுதியிற் சில, நூலாசிரியராகிய இறை யனர் கருத்தொடு முரணுவனவாகவும் உள்ளன. களவு, கற்பு என்னும் ஒழுகலாறு இவ்வுலகில் நிகழும் உண்மை நிகழ்ச்சி யையே குறிக்கும் என்பதனை, ' களவு கற்பெனக் கண்ணிய ஈண்டையோர் உளநிக ழன்பின் உயர்ச்சி மேன ” 1. கடைச்சங்கப் புலவராகிய இறையனரை மதுரைத் திரு வால வாயில் எழுந்தருளிய சிவபெருமானகவே முன்னேயோர் கருதிப் போற்றியுள்ளனர்.

  • பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினே க் கொங் குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப் பொற்குவை தருமிக் கற்புட னுதவி என்னுளங் குடிகொண் டிரும்பயனளிக்கும் கள்ள வீழ் குழல் சேர் கருணையெம் பெருமான்'

(கல்லாடம்-செய். i) எனக் கல்லாடருைம், * நன்பாட்டுப் புலவனுய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினேன் காண் ’’ (திருப்புத்தூர்த் திருத்தாண்ட கம்) எனத் திருநாவுக்கரசு சுவாமி களும் இறைவனைப் போற்றுதல் இவண் கருதற்குரியதாம். 2. மதுரைக் கணக்காயனர் மகளுர் நக்கீரனா கண்டவு ை! அவர் மகனர் கீரங்கொற்றனர் முதல் முசிறியாசிரியர் நீலகண்டனர் வரை ஒருவர்பின் ஞெருவராகப் பாடஞ் சொல்லப்பெற்று வந்து பின்னர் எழுதப்பட்டதெனக் களவியலுரையின் முகவுரையால் உய்த்துணரலாம். முசிரியாசிரியர் நீலகண்டனுரோ அன்றி அவர் தம் மாணவரொருவரோ இறையனர் களவியலுரையினே எழுத் துருவில் அமைத்திருத்தல் வேண்டும். இப்பொழுது வழங்கும் உரைநடை நக்கீரனுர்க்குப் பல தலைமுறை பிற்பட்டு வந்த தவச் செல்வராகிய துறவியொருவரால் எழுத்துருவமைந்ததென்பது,