பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமவியல் 懿3 "பொன்காண் கட்டளை கடுப்பச் சண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்" (பெரும்பாண்-220-1} என்புழிச் சண்பங்கோசையின் பூந்துகள் படிந்த செஞ்சுவட்டினை யும் அச்சுவட்டினைப் பொருந்திய உழவர் சிருரது கரிய மார்பினை யும் இணைத்து ஒன்ருக உவமிக்கக் கருதிய புலவர், அவ்விரண் டினையும் முறையே பொன்னின் உரையோடும் அதனைப்பொருந்திய உரைகல்லோடும் இணைத்து உவமை கூறினமையின், இரட்டைக் கிளவியாகிய உவமேயம் இரட்டைக் கிளவியாகிய உவமானத் தின் பின் வந்தமை காண்க. புலவன் தான்வெளிப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சி யுடன், அதனை உவமையாகக் கொண்டு உய்த்துணரப்படும் உவமேயப் பொருள் இதுவென வேறு நிறுத்திக் கூருமல், உவம நிலங்களுட் பிறந்த பிறவிகளோடு சார்த்தி நோக்கிக் கருத்தி ல்ை இதற்கு இது உவமையென்று கொள்ளவைத்த முறையினல், இன்ன பொருட்கு இஃது உவமமாயிற்றென்று நல்லுணர்வுடை யோர் துணிந்து கொள்ள வருவது மேற்கூறிய உள்ளுறையுவம் மாகும் என்பர் ஆசிரியர். எனவே இது நல்லுணர்வுடையோர்க் கன்றி ஏனையோர்க்குப் புலனுகாதென்பதும், உணர்வுடையோர் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இஃது அமைதல் வேண்டுமென்ப தும், இதல்ை இவ்வுவமை செய்யுளுட் பயின்று வருமென்பதும் கூறினராயிற்று. உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாக ஒருங்கு வைத்துக் கூறப்படாத நிலையிலும் உள்ளுறையாகிய இஃது உவமம்போன்று பொருள்கொள்ளப்படுதலின் இதனை உவமையென்ருர். உவமை என்பது ஒப்பினலாய பெயர். உவமம் போலப் பொருள் கொள்ளப்படுதலின் இதனை உவமப் போலியென வழங்குவர் ஆசிரியர்.