பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 薰9甄 யார் முதலிய பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள். தளையென்ப தனைத் தனியுறுப்பாகவே கொண்டனர். இருசீர் இணைந்தது குறளடியாம் என்பது தொல்காப்பியனுர்க்கும் பிற்காலத்தில் வாழ்ந்த யாப்பிலக்கண நூலாசிரியர்க்கும் ஒப்ப முடிந்ததாகும். இனி, சீரிரண்டு தளத்து நிற்றல் தளேயென்னுந் தனி யுறுப்பா மெனக் கொள்ளின் இவ்விருசீர் இணைப்பைக் குறளடியென வேருேர் உறுப்பாகக் கூறுதல் பொருந்தாது. அன்றியும் தளை பல அடுத்து நடப்பதே அடியெனக் கொள்வார்க்கு அத்தளை யால் அடி வகுப்பதன்றிச் சீரால் அடிவகுத்தல் குற்றமாய் முடியும் ஆதலால் சீரது தொழிலாகிய தளையென்பதனைத் தனி வேறு உறுப்பாகக் கொள்ளுதல் கூடாதென்பது பேராசிரியர் முதலி யோர் துணியாகும். 'இவ்வாசிரியர் (தொல்காப்பியனுர்) தளையை உறுப்பாகக் கொள்ளாதது என்னையெனின், - தளையாவது சீரினது தொழி லாய்ப் பாக்களின் ஓசையைத் தட்டு (தனத்து) இருசீர் இணைந்த தாகும். அவ்வாறு இணைந்த இருசீரிணையும் ஆசிரிய ரெல்லாம் இருசீர்க் குறளடி என அடியாகவே வகுத்துக் கொண்டாராதலின் தளையென வேருேள் உறுப்பின்ரும்; அன்றியும் தளையான் அடிவகுப்பாரும் உளராயினன்றே அதனை உறுப்பென்று கொள்ள வேண்டுவது? அங்ங்ணம் வகுத்துக் கொள்ளாமையின் உறுப்பென்னது சீரது தொழிலாய் ஓசையைத் தட்டு நிற்ப தொன்றென்றே கொண்டார். அதனை உறுப்பென்பார்க்குச் சீரான் அடிவகுத்தல் குற்றமாம்” எனவரும் நச்சிர்ைக்கினியர் உரைப்பகுதி இதனை வலியுறுத்தல் காண்க. இனி, செய்யுளுக்குரிய முப்பத்துநான்கு உறுப்புக்களையும் பற்றி இவ்வியலிற் கூறப்படும் இலக்கணங்களைச் சுருக்கமாக உணர்ந்துகொள்ளுதல் நலமாகும்.