பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 தொல்காப்பியம் நுதலியபொருள் நிரைபு என்னும் உரியசை யிரண்டினையும் உறழ வரும் ஈரசைச் சீர் நான்கும் ஆசிரியவுரிச் சீரெனப்படும். அவை ஆற்றுநோக்கு ஆற்றுவரவு, வரகுசோறு, வரகுதவிடு என்பனவாம். நேர் பசை நிரை பசையின்பின் நிரையிறுதியும் ஆசிரியவுரிச் சீராம். உதாரணம்; யாற்றுமடை, குளத்துமடை நேர்பசை நிரையசை யின் பின்னர் நேரசை நிற்பின் இயற்சீராம். (உ-ம்) ஆற்றுக்கால், குளத்துக்கால், இயலசைப் பின்னர் உரியசைவரின் நிரையசை வந்தாற்போல (இயற்சீரென)க் கொள்ளப்படும். (உ-ம்) மாங் காடு, களங்காடு, பாய்குரங்கு, கடிகுரங்கு, இத்துணையும் இயற் சீர்பத்தும் உரிச்சீர் ஆறும் ஆகிய ஈரசைச்சீர் பதினறும் கூறப் பட்டன. உயிரளபெடை அசைநிலையாக நிற்கவும் பெறும் எனவும், ஒற்று அளபெடுத்து வரினும் முற்கூறியவாறு அசை நிலையாகலும் உரித்து எனவும் கூறுவர் ஆசிரியர். உம்மை எதிர்மறையாக லான் சீர்நிலையாதலே வலியுடைத்தென்பது புலம்ை. 'கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகாஅமை வல்லதே யொற்று” என்புழி, கடாஅ என்பது புளிமா என அலகுபெற்றும், "உப்போஒ வெனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவல்" என்புழி அசைநிலையாகி யலகுபெருதும் உயிரளபெடை வந்தன. “அளபெடைகளெல்லாம் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொதுவாயினவும், செய்யுட்கே யுரியவாகிச் செய்யுள் செய்யும் புலவராற் செய்து கொள்ளப்படுவனவும் என இருவகைய: அவற்றுள் வழக்குக்கும் செய்யுட்கும் பொதுவாகியதனை இயற்கை யளபெடை யென்றும், செய்யுட்குப் புலவர்செய்து கொண்டதனைச் செயற்கை யளபெடையென்றும் பெயரிட்டு வழங்கப்படும். அவ் விரண்டனுள்ளும் ஈண்டு அளபெடை யசைநிலையாகலு முரித்து