பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 257 களில் அமைந்த சீரது நிலை ஒசையாற் குறைதலும் மிகுதலும் இல்லையென்பர் ஆசிரியர். தத்தம் ஓசை இனிது விளங்க ஒலித் தற்ருெழிலில்லாத ஒற்றும் ஆய்தமும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் சொற்கு உறுப்பாதல் நோக்கி எழுத்தெனக் கொண்டு எண்ணத்தக்கன வாயினும், அவை உயிரெழுத்துக்களைப் போன்று விரிந்திசைத் தலும் தனித்தியங்கும் ஆற்றலும் இல்லாதன வாதலின், மேல் ஐவகையவாகப் பகுத்துரைக்கப்பட்ட கட்டளையடிக்கண் எழுத் தெனக்கொண்டு எண்ணப்படுதல் இல்லை. இந்நுட்பம்உயிரில் லெழுத்தும் எண்ணப் படாஅ, உயிர்த்திறமியக்கம் இன்மையான' (செய்-42} எனவரும் சூத்திரத்தால் உணர்த்தப்பட்டமை காண்க. வஞ்சிப்பாவிற்குரிய அடி இரண்டு சீரையுடையதாகும். வஞ்சியுரிச் சீரின் சிறுமை முன்றெழுத்தென்று கொள்ளப்படும். வஞ்சியடி முன்று சீராலும் வருதலுண்டு. மேற்குறித்த இரு வகை வஞ்சியடியிலும் அசை கூணுகி வரும் சீர் முழுதும் கூணுகி வருதல் நேரடியாகிய அளவடிக்குரியதாகும் என இவ் வியல் 43 முதல் 47 வரையுள்ள சூத்திரங்களில் ஆசிரியர் குறித் துள்ளார். நாற் சீரடியை எழுத்தளவு பற்றி வகுக்கப்பட்ட குறளடி முதலாகிய ஐவகை யடிகளையும் விரித்துணர்த்துங் காலத்து, அசையுஞ் சீரும் தோற்றுதற்கிடமாயமைந்த நாலெழுத்து முதல் இருபதெழுத் திருகச் சொல்லப்பட்ட பதினேழ் நிலத்தும் எழுபது வகைப்பட்ட உறழ்ச்சியின் வழுவுதலின்றி அறுநூற் றிருபத்தைந் தாகும் என இவ்வியல் 48-ஆம் சூத்திரம் கூறும். 2. அடிமுதற்கண் பாவினது பொருளேத் தழுவித் தனியே திற்கும் அசையும் சீரும் கூன்' எனப்படும்.