பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 த்ொல்காப்பியம் கினியாரும் காவிய குலத்தவராவரென்றும், இக்குலம் பழைமை பற்றி விருத்த காவியகுலம் என வழங்கப்படுமென்றும், இப் பெயரே தமிழில் தொல்காப்பியக்குடி யென மொழி பெயர்த்து வழங்கப்பெற்றதென்றும், இக்குடியிற் பிறந்து சிறந்த தல்ை குடிப்பெயரே ஆசிரியர் பெயராக வழங்கப்பட்டதென்றும், சமதக் கினியார்க்குக் காவிய கோத்திரம் இயையாமையும் ரீவத்ச கோத்திரமே இயைபுடைமையும் கோத்திர முணர்ந்தார்வாய்க் கேட்டுத் தெளியத் தக்கதென்றும், ஆகவே சமதக்கினியார் புதல்வராக நச்சிஞர்க்கினியராற் குறிக்கப்பட்ட தொல்காப்பியஞர் காப்பிய கோத்திரத்தவராகார் காப்பியக்குடியினரே (காவ்ய குலத்தவரே) ஆவர் என்றும் அறிஞரொருவர் கூறியுள்ளார்." காவிய கோத்திரமும் காவ்யகுலமும் வேறு வேறென்பது அவரது கருத்தாகும். வான்மீகியார் பிருகு மகாரிஷியின் பத்தினியைக் காவ்யமாதா எனப் பாலகாண்டத்திற் கூறியது, கவியாகிய சுக்கிரனுக்குத் தாய் என்னும் பொருளிலன்றிக் கவி வமிசத் தவர்க்குத் தாய் என்னும் பொருளிலன்ரும். காவ்யமாதா என்னும் இவ்வொரு பெயரை வைத்துக்கொண்டு, காவ்ய கோத்திரத்தின் வேருகக் காவியகுலம் என்பதொன்றுண்டெனவும் அது பழமை கருதி விருத்த காவியகுலம்’ என வழங்கப்படு மெனவும் அதன் மொழிபெயர்ப்பே தொல்காப்பியக்குடி யெனவும் வலிந்து பொருள் கொள்ளுதற்குக் காப்பியன் என்னுந் தமிழ்ச் சொல்லை வடசொல்லொன்றின் திரிபாகச் சொல்லவேண்டும் என்னும் எண்ணமே காரணமாவதன்றிப் பிறிதில்லை. காவ்ய என்னுஞ் சொல் கோத்திரத்தைக் குறித்து வழங்கினும் அன்றிக் குலத்தைக் குறித்து வழங்கினும் வடசொல்லாகிய அதற்கும் தமிழில் இயற்பெயராய் வழங்கும் காப்பியன் என்னுஞ் சொல்லுக் கும் ஒரு சிறிதும் பொருளொற்றுமையில்லை யென்க. 1. மகாவித்துவான் ரா. இராகவையங்கார் எழுதிய "தமிழ் வரலாறு பக்கம், 255- 57. - 2. பல்காப்பியனுரைப் பஹாகாவ்ய கோத்திரத்தவர் என்ருே ஆந்தகாவ்ய கோத்திரத்தவரென்ருே மொழிபெயர்ப்பர் போலும்.