பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 2. l. பராசரர் என்ற முனிவரினின்றும் வேறுபாடறிதற்கு விருத்த பராசரர் என வேருெருவர் வடநூலுள் வழங்கப்படுதல் போன்று காப்பியன் என்னும் பெயருடையார் பலரினின்றும் வேறுபாடறி தற்குத் தொல்காப்பியன் என இவ்வாசிரியர் அடைமொழியுடன் வழங்கப்பெற்ருர் எனப் பெயர்க்காரணங் கூறுதலுமுண்டு. இத் நூலாசிரியர் தம் காலத்திற்குப் பின் பல்லாண்டுகள் கழித்துப் பிறக்கவிருக்கும் காப்பியப் பெயருடையார் பிறரினின்றும் வேறு பாடறிதற் பொருட்டு முற்காலத்திலேயே தொல்காப்பியன் என அடைமொழியுடன் வழங்கப்பெற்ருர் எனக் கூறுதல் பொருத்த முடையதன்ரும். தொல்காப்பியன் என்பதிலுள்ள தொல் என்னும் அடைமொழி ஆசிரியர் காலத்திற்குப் பின் சேர்த்து வழங்கப் பட்டிருக்குமானல், அவர் காலத்தில் காப்பியன் என்பதே அவர்க்கு இயற்பெயராய் வழங்கியிருத்தல் வேண்டும். அங்ங்னம் வழங்கியது உண்மையாயின் அவரால் இயற்றப்பெற்ற இந் நூலும் தொல் என்னும் அடைமொழி பெருது காப்பியம் என்ருே காப்பியன் என்ருே பெயரெய்தியிருத்தலே முறையாகும். தொல் காப்பியன் என்பது ஆசிரியரது இயற்பெயரென்றும் அப்பெய ரையே அவரால் இயற்றப்பட்ட நூலுக்குந் தோற்றுவித்தாரென் றும் ஆசிரியரோடு ஒரு காலத்தவராகிய பனம்பாரளுர் பாயிரத் திற் கூறியுள்ளார். பனம்பாரளுர் தொல்காப்பியர் காலத்தவ ரென்பது தொன்றுதொட்டு வழங்கிவரும் வரலாருகும். அங்ங்ன மாதலின் தமக்குக் காலத்தால் முற்பட்டவர் என்னும் பொருள் படக் காப்பியன் என்னும் இயற்பெயருடன் தொல் என்னும் அடைமொழியைப் பனம்பாரனர் புதுவதாக இயைத்துரைத்தார் எனக் கொள்ளுவதற்கில்லை. ஆகவே தொல்காப்பியன் என்னும் இப்பெயர், நூலாசிரியர் காலத்திலேயே அவர்க்கு வழங்கியிருத் தல் வேண்டுமென்பது உறுதி. ஆசிரியர் காலத்திற் காப்பியன் என்னும் இயற்பெயர் பலர்க்கும் இடப்பெற்று வழங்கியதுணர்ந்த தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி பக்கம் 2