பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 23 வாறு உணர்தற்கு இச்சிறப்புப் பாயிரமே பெருந்துணை செய் கின்றது.

  • வடவேங்கடந் தென்குமரி

யாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த தொல்காப் பியன் எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே.” என்பது தொல்காப்பியச் சிறப்புப் பாயிரமாகும். 'வடக்கின் உளதாகிய வேங்கடமும் தெற்கின் உளதாகிய குமரியும் ஆகிய அவற்றை எல்லையாகவுடைய நாட்டின்கண் தமிழ் மொழியினைக் கூறும் நன்மக்கள் நிரம்பிய நல்ல நிலத்து வழங் கும் உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய இரு காரணத் தானும், எழுத்திலக்கணத்தினையுஞ் சொல்லிலக்கணத்தினையும் பொருளிலக்கணத்தினையும் ஆராய்ந்து, செந்தமிழ் மொழியின் இயல்போடு பொருந்திய முன்னைத் தமிழகத்திற்ருேன்றி வழங்கும் முன்னை நூல்களிற் சொன்ன இலக்கணங்களைக்கண்டு, அவற்றை முறைப்பட ஆராய்ந்து நூலைத்தொகுத்துச் செய்தான்; அங்ங்னஞ் செய்த குற்றமற்ற நூலினை நிலந்தரு திருவிற் பாண்டியன்