பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 253 அவற்றுள் ஒன்றே செவிலிக்கு உரியது; மற்ருென்று எல்லார்க் கும் உரியதாகும்." ஒப்புமைத் தன்மையொடு பொருந்திய உவமப் பொருளும்,' ஒன்று சொல்ல மற்ருென்று தோன்றுந் துணிவுபடவரும் சொல் நிலையும்’ எனப் பிசி இருவகைப்படும். முற்கூறிய உரை வகை நடை நான் கினுள், பாட்டிடை வைத்த குறிப்பு, பாவின் றெழுந்த கிளவி என்னும் முன்னேய இரண்டும் ஒரு தொகுதியாகவும், பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி, பொரு ளொடு புணர்ந்த நகை மொழி என்னும் பின்னேய இரண்டும் மற்ருெரு தொகுதியாகவும் கொள்வர் பேராசியர் முதலியோர், 1. அவற்றுள், பொருள் மரப்பில்லாப் பொய்ம்மொழியும் பொருளொடு புணர்ந்த நகைமொழியும் ஆகிய பிற்கூறு செவிலிக்கு உரியதெனவும், பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின்றெழுந்த கிளவியும் ஆகிய முற் கூறு வரையறையின்றி எல்லார்க்கும் உரித் தெனவும் கொள்ளுதல் வேண்டும். இங்ங்னம் கொள்ள வே, தலே மகளே வளர்க்குஞ் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரிய ரென்பது நன்கு புலம்ை. இக்கருத்தில்ை, "செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழி இக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி” (நெடுநல்.153.4) என நக்கீரருைம், 'செம்முது செவிலியர்......... ... தன்னிணேயாம் பன்னெடிபகர” (பெருங்-1.54-25.32) எனக் கொங்குவேளும் இவ் வுரைவகையினைச் செவிலிக்கு உரியனவாக இயைத்துரைத்துள்ளமை காணலாம். 2. யானே செல்லும் என வெளிப்படச் சொல்லாது, 'பிறை கவ்வி மலே நடக்கும்’ என உவமானத்தாற் குறிப்பிற் புலப்பட வைத்தல், ஒப்பொடு புணர்ந்த உவமம் என்னும் பிசிவகையாம். 3. " நீராடரின் பார்ப்பான் நிறஞ் செய்யான் நீராடில் ஊராடும் நீரிற் காக்கை” என்பது நெருப்பு என்னும் பொருள் குறிப்பில் தோன்ற அமைந்த சொற்ருெடர் நிலேயாகும். இது தோன்றுவது கிளந்த துன்னிவு” என்னும் பிசி வகைக்கு உதாரணமாகும். மேற்குறித்த பிசி வகை யாகிய இவற்றை இக்காலத்தார் பிதிர் (புதிர்) எனவும் விடுகதை யெனவும் வழங்குவர்.