பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26% தொல்காப்பியம் துதலியபொருள் ஒதப்படுவன” என்பர் இளம்பூரணர். ‘பாட்டிடைக் கலந்தி பொருளவாகி என ஆசிரியர் கூறுதலால் இயற்றமிழ்ப் பாடல் களுக்கு உரியனவாகச் சொல்லப்பட்ட பொருள்களே பண்ணைத் தோற்றுவிக்குஞ் செய்யுளாகிய இவ்விசைப் பாடல்களுக்கும் உரியன என்பதும், பாட்டு எனக் கூருது பாட்டின் இயல' என்றமையால் இயற்றமிழ்ப் பாடல்களுக்கு உரியனவாக முற். கூறப்பட்ட நோக்கு முதலிய செய்யுளுறுப்புக்கள் சிலவற்றை இவ் விசைப்பாடல்கள் பெற்றே வருதல் வேண்டுமென்னும் நியதியில்லை யென்பதும் நன்கு விளங்கும். மேற் சொல்லப்பட்ட பண்ணத்தி பிசியோடு ஒத்த இயல் பினது என்பர் தொல்காப்பியர். "பிசி யென்பது இரண்டடி யளவின்கண்ணே வருவதாதலின் இதுவும் இரண்டடியான் வரு மென்று கொள்ளப்படும்" எனவும், 'கொன்றை வேய்ந்த செல்வ னடியை என்று மேத்தித் தொழுவோம் யாமே! என்பது, பிசியோடு ஒத்த அளவினதாகிப் பாலேயா ழென்னும் பண்ணிற்கு இலக்கணப் பாட்டாகி வந்தமிையிற் பண்ணத்தி யாயிற்று' எனவும் இளம்பூரண அடிகள் கூறிய விளக்கம் இங்கு நோக்கத் தகுவதாகும். பண்ணத்தியென்னும் இவ் விசைப்பாடல்களின் அடியளவு பன்னிரண்டடி பேரெல்லே யென்பதும், இவற்றிலுள்ள அடிகள் "நாற்சீர் கொண்டது அடியெனப்படும் என்னும் அவ்வரையறை யின் இகந்து நாற்சீரின்மிக்கும் குறைந்தும் வரினும் நீக்கப்படா என்பதும், "அடிநிமிர் கிளவி யீரா ருகும் அடியிகந்து வரினுங் கடிவரையின்றே (செய்-175) எனவரும் சூத்திரத்தால் தெளிவாக உணர்த்தப்பட்டன.