பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 25% இச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளாது, "நாற் சீரடியின் மிக்குவரும் பாட்டுப் பன்னிரண்டும் அவ்வழி அவ்வடி யின் வேறுபட்டு வருவனவும் கொள்ளப்படும்” எனப் பொருள் கொண்டு, இதனுற் சொல்லியது இருசீரடி முதலிய எல்லா அடிகளானும் மூன்றடிச் சிறுமையாக எறிவரும் பாவினம் என்ற வாறு” எனவும், 'பன்னிரண்டாவன: ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி எனச் சொல்லப்பட்ட நான்கு பாவிளுேடும் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம்” எனவும், இவையெல்லாம் உரையிற் கோடல் என்பதலுைம் பிறநூல் முடிந்தது தானுடம்படுதல் என்பதலுைம் கொள்க’ எனவும் விளக்கங் கூறுவர் இளம்பூரணர். அவ் வாசிரியர், அடியிகந்து (நாற்சீரடியின்மிக்கு) வருவனவாகக் கூறிய பாவினங்கள் பன்னிரண்டனுள், வெள்ளொத் தாழிசை, கலித்தாழிசை என்பன பெரும்பாலும் நாற்சீரடியால் இயன்று வ ரு த லா லும், கலிவிருத்தம் யாண்டும் நாற்சீரடியேயாய் வருதலாலும், அவை அவர் கருத்துப்படி அடி நிமிர்கிளவி யெனப்படா ஆதலாலும், நான்கு பாவிைேடும் தாழிசை துறை, விருத்தம் என்பவற்றை உறழ்ந்து காணப் பாவினம் பன்னிரண்டாம் என்ற குறிப்பு இச் சூத்திரத்தில் இடம் பெருமையாலும், இம் மூன்றனுள் தாழிசையென்பதொன்றே கலியுறுப்புக்களுள் ஒன்ருக வைத்துரைக்கப்படுவதன்றித் துறை, விருத்தம் என்பன செய்யுள் வகையாகத் தொல்காப்பியத்தில் குறிக்கப்படாமையாலும் இச் சூத்திர வுரையுள் இளம்பூரண அடிகள் எடுத்துக்காட்டிய பாவினப் பாகுபாடு ஆசிரியர் தொல்காப்பியனர் கருத்துக்கு ஏற்புடைய தாகத் தோன்றவில்லை. 13. திணை:- செய்யுளிற் கூறப்படும் ஒழுகலாறுகளே அகத்திணையும் புறத்திணையும் என இவ்வாறு பாகுபடுத்து அறி தற்குரிய கருவி திணை யெனப்படும்.