பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 27; என்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கை நெறியில் தப்பாது மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு என்னும் இவற் ருேடு கூடிவருவது கற்பென்னும் கைகோளாகும். மறைவெளிப்படுதலும் தமரிற்பெறுதலும் என முற்கூறிய இரண்டும் ஆசான் முதலியோர் செய்வித்தலின், பிறரொடு பட்ட ஒழுகலாறெனப்படும். மலிவு முதலிய ஐந்தும் கைகோளின்பாற் சார்த்தித் தலைவனும் தலைவியும் ஒழுகும் ஒழுகலாறெனவே படும். மலிதல் என்பது, இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாய வற்ருல் மகிழ்தல். புலவி என்பது, புணர்ச்சியால் வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங் கருதிக் கொண்டுய்ப்பதோர் உள்ள நிகழ்ச்சி. ஊடல் என்பது, உள்ளத்து நிகழ்ந்த தனக் குறிப்பு மொழி யாலன்றிக் கூற்றுமொழியால் உரைப்பது. உணர்வு என்பது, அங்கினம் ஊடல் நிகழ்ந்தவழி அதற்கு ஏதுவாகிய பொருளின்மை உணர்வித்தல், இல்லாததனை உண்டோவென ஐயுற்ற மயக்கந்தீர உணர்த்துதலால் உணர்த்து தல் எனவும், அதனை உணர்தலால் உணர்வு எனவும் இது வழங்கப்படும். புலவியாயின் குளிர்ப்பக்கூறலும் தளிர்ப்ப முயங் கலும் முதலாயவற்ருன் நீங்குதலின் அதற்கு உணர்த்துதல் வேண்டா என்பர். பிரிவு என்பது, இவை நான்கிளுெடும் வேறுபடுதலின் பிற்கூறினர். இதனை ஊடலொடு வைக்கவே ஊடலிற் பிறந்த துனியும் பிரிவின்பாற்படுமென்பதும் கொள்ளப்படும். துணித்தல் என்பது வெறுத்தல், அது, காட்டக்கானது கரந்து மாறு மியல்பினதென்பர். அறுவகைப் பிரிவும் பிரிவெனவே அடங்கும்.