பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 தொல்காப்பியம் துதலியபொருள் தோறும் புதியனவாகத் தோன்றக் கூடிய செய்யுள்வகை யனைத் திற்கும் அடிப்படையா யமையும் வண்ணம் தொல்காப்பியனரால் நுண்ணிதின் ஆராய்ந்து வகுத்துணர்த்தப்பட்டனவாதல் நன்கு புலம்ை. மரபியல் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் நெடுங்காலமாக வழங்கிவரும் சொற்பொருள் மரபு உணர்த்தினமையின் இது மரபியல் என்னும் பெயர்த்தாயிற்று. இவ்வதிகாரத்துக் கூறப் பட்ட பொருட்கு மரபு உணர்த்தினமையான் மரபியல் என்னும் பெயர்த்து என்பர் இளம்பூரணர். "கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஒதப்பட்டனவும் செய்யுளியலுள் மரயென்று வரையறுத்து ஒதப்பட்டனவுமின்றி, இருதினைப் பொருட் குண்ணுகிய இளமையும் ஆண்மையும் பெண் மையும் பற்றிய வரலாற்று முறைமையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும்; அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும்; அவை பற்றிவரும் உலகியன் மரபும் நூன் மரபும் என இவை யெல்லாம் மரபெனப்படும்” எனவும், முன்னர் வழக்கி லக்கணங் கூறி யதன்பின் செய்யுளிலக்கணம் செய்யுளியலுட் கூறினன், அவ் விரண்டிற்கும் பொதுவாகிய மரபு ஈண்டுக் கூறினமையின் இது செய்யுளியலோடு இயையுடைத்தாயிற்று” எனவும், 'வழக்குஞ் செய்யுளுமென்று இரண்டு மல்லாத நூலிற் கும் ஈண்டு மரபு கூறினமையின் இது செய்யுளியலின் பின் வைக்கப்பட்டது” எனவும் கூறுவர் பேராசிரியர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களே 12-ஆக இளம்பூரணரும், 10-ஆகப் பேர்ாசிரியரும் பகுத்து உரை வரைந்துள்ளார்கள்.