பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 2.93 'ஏறு என வழங்கப்படுவன: பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, சுறவு என்பனவாம். போத்து' என்ற பெயர் பெறுவன: பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், நீர்வாழ்சாதி, மயில், எழால்’ என்பனவாம். இரலை', 'கலே' என்ற பெயர்கள் இரண்டும் புல்வாய் என்னும் இனத்துள் ஆண்பாற்கு உரியன. இவற்றுள் கலை' என்னும் பெயர் உழை, முசு என்பவற்றிற்கும் உரியதாகும். மோத்தை, தகர், உதள், அப்பர் என்ற பெயர்கள் ஆடுகளில் ஆண்பாற் குரியனவாய் வழங்கும். சேவல் என்ற பெயர், தோகையையுடைய மயிலல்லாத ஏனைப் பறவையினத்துள் ஆண்பாற்கெல்லாம் ஒப்பவுரியதாகும்.” 'ஏற்றை என்ற பெயர், ஆற்றலுடைத்தாகிய ஆண்பாற் கெல்லாம் பொதுவாக வழங்குதற்குரியதாம், 1. நீருள் வாழும் முதலே முதலியனவற்றுள் ஆண்பால் 'போத்து என வழங்குதற்குரியன என்பார், நீர்வாழ் சாதியும் அது பெறற் குரிய (மரபு-44) எனப் பாடங்கொண்டார் இளம்பூரணர் "அறு பிறப்புரிய எனப்பாடங்கொண்டு, 'அறுபிறப்பென்பன: சுரு, முதலே. இடங்கர், கரசம், வரால், வாளே என இவை எனப் சிபாருளுரைத்தார் பேராசிரியர். நாரையுள் ஆணும் போத்து' என வழங்கப்படுதல் உண்டு. 2. எழால் - புல்லுறு என்ற பறவை. 3. "மாயிருந்துள்வி மயில்’’ என்ற தன்ை, அவை தோகை புடைய வாகிப் பெண் போலும் சாயல் ஆகலான் ஆண்பாற்றன்மை இல என்பது கொள்க’ என்பர் பேராசிரியர். எனவே, தோகை யையுடைய ஆண்மயில்கள் 'சேவல்’ என்ற ஆண்பாற் சொல்லால் வழங்கப்பெருவாயின. செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அது (சேவல் என்ற பெயர்) நேரவும்படும் எனப் பேராசிரியர் கூறும் அமைதி பிற்கால இலக்கிய வழக்கினேத் தழுவிக் கொள்ளும் கருத்தின தாம்.