பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தொல்காப்பியம் தொல்காப்பியனர் காலத்துக்கு மிகமிகப் பிற்காலத்தே இயற்றப் பெற்றனவாதல் வேண்டுமென்பது பெறப்படும். பழமையுடைய நூலாகிய தொல்காப்பியத்தினும் பழமையும் பெருமையுமுடைய வேருெரு நூலுளது எனக் காட்டமுயன்ற பிற்காலத்தாரது புதுப் படைப்பாகவே இக்காலத்திற் கிடைத்த அகத்தியச் சூத்திரங்கள் அமைந்துள்ளன. தம்முடைய கொள்கைகள் எல்லாவற்றுக்கும் தொன்மை நூல்களில் ஆதரவுண்டெனக் காட்ட விரும்பினர் சிலர், தமக்கு முன்னுள்ள சான்ருேர் பெயரால் புது நூல்களே இயற்றிப் பரப்புங் கருத்துடையராயினர். அக்கருத்துடையார் சிலரால் பிற்காலத்திற் புனைந்துரைக்கப்பட்டதே பன்னிருபடலம் என்னும் புறப்பொருளிலக்கண நூலாகும்.அகத்தியர்ைபால் தொல் காப்பியனர் முதலிய மாணவர் பன்னிருவர் தமிழ் பயின்றனரென வும் அவர்கள் பன்னிருவரும் வெட்சிமுதலிய புறத்திணைகளுள் ஒவ் வொன்றின் இலக்கணத்தைப்பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு படலமாக இயற்றி அவையனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப் பன்னிருபடலம் என்ற பெயரால் ஒரு நூலை வெளியிட்டார்கள் என வும் அப்பன்னிரு படலத்தின் வழிநூலாகிய புறப்பொருள் வெண்பா மாலைப் பாயிரம் கூறினமை முன்னர் உணர்த்தப்பட்டது. இக் கூற்றின்படி நோக்கினல் பன்னிரு படலத்தில் முதற்படலம் தொல்காப்யியர் இயற்றியதாகக் கொள்ளல் வேண்டும். தொல் காப்பியத்தில் ஆசிரியர் கூறிய வெட்சித்திணையின் இலக்கணத் திற்கும் பன்னிருபடலத்தில் தொல்காப்பியர் இயற்றியதாகக் குறிக் கப்படும் வெட்சிப்படலத்திற் கூறப்பட்டவற்றிற்கும் முரண்பாடு காணப்படுகின்றது. இம்முரண்பாட்டினை தெளியவுணர்ந்த உரை யாசிரியர் இளம்பூரணர் பன்னிரு படலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியனர் கூறினரென்றல் பொருந்தாது எனக்கூறி மேற்குறித்த கதையின் பொருந்தாமையினை எடுத்துச் காட்டியுள் ளார். இங்ங்ணம் பன்னிரு படலத்தின் புதுப்படைப்பினை எடுத்துக் காட்டியதுபோல அகத்தியச் சூத்திரங்களின் எடுத்துக் காட்டும் வாய்ப்பினை உரையாசிரியர் பெற்ருரல்லர். அவர்