பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 45 காலத்து வாழ்ந்த நான்கு வருணத்தொடுப்பட்ட சான்றேர் பலரும் அகத்தியமே முற்காலத்து முதனூலென்றும் அதன்வழித் தாகிய தொல்காப்பியம் அதன் வழி நூலென்றும் கூறிவந்தார் கள். அங்ங்னங் கூருக்கால் மரபு வழுவாமென்று அஞ்சி அகத்தியர்வழித் தோன்றிய ஆசிரியரெல்லாருள்ளுந் தொல் காப்பியனரே தலைவர் என எல்லா ஆசிரியருங் கூறி வருவாரா யினர். ஆதலால் அக்கொள்கையின் வன்மை மென்மைகளை ஆராய்தல் மரபு வழுவாமென்று அஞ்சி அக்காலத்தில் வாழ்ந்த உரையாசிரியர் பலரும் அவ்வாராய்ச்சி பற்றிய தம் முடிபினே வெளிப்படுத்த விரும்பவில்லை. எனினும், பனம்பாரளுர் பாயிரத் தில் முந்துநூல் எனக் குறிக்கப்பட்டன. தொல்காப்பியனர் காலத்துக்கு முற்பட்டுத் தோன்றியவழக்கு வீழ்ந்தனவேயென்றும் (பிற்காலப் படைப்பாகிய) அகத்தியச் சூததிரங்களுக்கு மாறுபட்ட விதிகளும் தொல்காப்பியத்திற் காணப்படுதலின் தொல்காப்பியம் அகத்தியத்தின் வழிநூலாதல் பொருந்தாதென்றும் கி. பி. பதினென்று பன்னிரண்டாம் நூற்ருண்டு வரையிலும் வாழ்ந்த அறிஞர் சிலர் தம் கருத்தினை வெளியிட்டு வந்துள்ளார்கள். அங்ங்ணம் கூறி வந்த அவர்களை வேத வழக்கொடு மாறு கொள்வார்' என அக்காலத்தவர் கருதினர். எனவே அவர்தம் கொள்கை பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்படா தாயிற்று. 'முந்து நூலெனப்பட்டன முற்காலத்து வீழ்ந்தன எனக் கூறித் தொல்காப்பியர் அகத்தியத்தோடு பிறழவும் நூல் செய்தார் என்றக்கால் என்னையெனின், அது வேதவழக்கொடு மாறு கொள்வார் இக்காலத்துச் சொல்லினும் இறந்த காலத்துப் பிறபாசண்டிகளும் மூன்று வகைச் சங்கத்து நான்கு வருணத் தொடு பட்ட சான்றேரும் அது கூருரென்பது” எனப் பேராசிரியர் கூறுத பால் இச்செய்தி யுய்த்துணரப்படும். தொல்காப்பியனுரை அகத் யர்க்கு மாணவர் எனக் கொள்வாரை நான்கு வருணத்