பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 47 மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் அழைத்துக்கொண்டு வந்து தென்னுட்டிற் காடுகெடுத்து நாடாக்கிப் பொதியமலையில் தங்கினர். இராவணனை இசை யால் வென்ருர், இராக்கதரை அங்கு வராமல் தடுத்தார். பின்னர்த் திரணதுமாக்கினியாராகிய தொல்காப்பியனுரை நோக்கி, நீசென்று குமரியாரைக்கொண்டு வருக எனக் கட்டளையிட்டார். அதுகேட்ட தொல்காப்பியனர், எம்பெரு மாட்டியை எங்ங்ணம் அழைத்து வருவேன்' என வினவி நின்ருர் முன்னும் பின்னும் நாற்கோல் நீளம் விலகி நின்று அழைத்து வருக என அகத்தியனர் கட்டளையிட்டார். அவர் பணித்த வாறே தொல்காப்பியனுருஞ்சென்று உலோபா முத்திரையாரை அழைத்து வந்தார். வரும் வழியில் வையை யாற்றில் இறங்கிய போது வெள்ளம் பெருகி உலோயாமுத்திரையாரை இழுத்துச் சென்றது அதுகண்டு அஞ்கிய தொல்காப்பியனர் மூங்கிற் கோலொன்றினை முரித்து விரைந்து நீட்டினர். அவ்வம்மையாரும் மூங்கிற்கோலைப் பற்றிக்கொண்டு கரையேறினர். நாற்கோல் நீளம் விலகி நின்று அழைத்து வருங் கடப்பாடுடைய தொல் காப்பியனர் வையை யாற்று வெள்ளம் உலோயாமுத்திரையாசை இழுத்துச் சென்றபொழுது ஒருகோலளவு நெருங்கிச் சென்று தன்கையிலுள்ள மூங்கிற்கோலைக்கொண்டு அவ்வம்மையாரைக் கரையேற்றி உய்வித்த செயல், முனிவர் பெருமாளுகிய அகத்திய ஞர்க்கு உய்தியில் குற்றமாகத்தோன்றியது. ஆகவே அகத்தியஞர் உலோபாமுத்திரையாரையும் தொல்காப்பியனுரையும் சுவர்க்கம் புகாப்பிர் (நற்கதியிற் செல்லாதொழிiர்) எனச் சபித்துரைப் பாராயினர். "யாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையால் எம்பெருமானும் சுவர்க்கம் புகாப்பிர் எனத் தொல்காப்பியனரும் அகத்தியனரைச் சபித்துரைத்தார். அதனல் அகத்தியனர் தம் மாணவரை வெகுள்வாராயினர். அதங் கோட்டாசிரியரை நோக்கி 'நீ தொல்காப்பியன் செய்தநூலைக் கேளற்க என அகத்தியனர் கூறினர். தொல்காப்பியனர் அதங்