பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4器 தொல்காப்பியம் கோட்டாசிரியரை யடைந்து யான் செய்த நூலே நீவிர் கேட்டல் வேண்டும் எனப் பலமுறையும் வேண்டிக் கொண்டார். இருவர் வேண்டுகோளுள் எதனை மறுத்தாலும் இருவருள் ஒருவரது வெகுளிக்குத் தாம் ஆளாதல் வேண்டிவரும் எனவுணர்ந்த அதங்கோட்டாசிரியர், தொல்காப்பிய நூலரங்கேற்றத்திற்கு வந்து அந்நூலுக்குக் குற்றங்கூறுமுகமாக இருவர் வேண்டு கோளுக்கும் முரண்படாதபடி நடந்துகொள்ள எண்ணினர். தொல்காப்பிய அரங்கேற்றத்திற்கு வந்திருந்து அதங்கோட்டா சிரியர் வினவிய விளுக்களுக்கெல்லாம் ஆசிரியர் தொல் காப்பியர் மயக்கமற விடை கூறினர். இக்கதை சிறப்புப்பாயிரவுரையில் அதங்கோட்டா சாற்கரில் தயத் தெரிந்து என வரும் தொடர்க்கு உரையாசிரியர் நச்சி ஞர்க்கினியரால் எடுத்துக் காட்டப்பெற்றதாகும். இதனைப் புனைந்து முதன்முதற் கூறியவர் நச்சிர்ைக்கினியரே எனச் சிலர் கருதுவர். தொல்காப்பியர் அகத்தியத்தொடு பிறழவும் அவற்று வழி நூல்செய்தார் என்றக்கால் இழுக்கென்னயெனின்" எனப் பிறர் கேட்பதாகப் பேராசிரியர் தம் உரையிற் குறிப்பிடுதலால் இக்கதை நச்சினர்க்கினியர்க்கு முன் பேராசிரியர் காலத்திலேயே உருப்பெறத் தொடங்கியதென எண்ண இடமுண்டு. அகத்திய ஞர்க்கும் தொல்காப்பியஞர்க்கும் பகைமையினை யுண்டாக்கிப் புனைந்த இப்பொய்க் கதையினைப் பேராசிரியர் முதலியோர் மெய்யென ஏற்றுக்கொள்ளவில்லையென்பது அவர் தம் உரைப் பகுதியால் நன்குவிளங்கும். இக்கதையின் பொய்ம்மையினை யுணராத நிலையிலேயே நச்சிர்ைக்கினியர் இதனைத் தம் உரையிற் குறிப்பிட்டாராதல்வேண்டும். அகத்தியஞர் செய்தனவாக இக் கதையிற் குறிக்கப்பட்ட செய்திகளிற் சில பிற்காலப் புராணங் களிற் சிலசில மாற்றங்களுடன் பேசப்பட்டுள்ளன. தொல்காப் பியனர் யமதக்கினியாரின் புதல்வரென்பதும், திரணதுமாக்கினி யென்னும் இயற்பெயருடையா ரென்பதும். வடநாட்டிலிருந்து