பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 5 § பலவற்றையும் நன்காராய்ந்து தொல்காப்பியனர் நூல்செய்தமை பற்றியே 'முந்நூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோன் எனப் பனம்பாரளுர் கூறியுள்ளார். தொல்காப்பியனுள் தமக்கு முன்னிருந்த ஆசிரியரைச் சுட்டுமிடங்களிலெல்லாம் என்ப' என்மஞர் புலவர் மொழிப' என்றங்குப் பொதுப்படவே ஒதியுள்ளார். அகத்தியனுக் தலைச்சங்கத்திலும் இடைச்சங்கத்திலும் இருந்து தமிழாராய்ந் தவராகக் களவியலுரை கூறும் அகத்தியஞரைப் பற்றியும் அவர் செய்த அகத்தியத்தைப் பற்றியும் பெயரளவிற் கேட்டுணர்வ தல்லது தெளிவாக அறிந்துகொள்ளுதற்குரிய பழைய நூற் சான்றுகள் இல்லை. அகத்தியர் என்பார் தமிழ் மொழிக்குச் சிறந்த இலக்கணமாக அகத்தியம் என்ற நூலை இயற்றினர் என்பதனைப் பின்வந்த உரையாசிரியர்களும் பிறரும் உடன்பட்டு வழங்கியுள் ளார்கள். உரையாசிரியர்கள் அகத்தியம் என்ற பெயரால் எடுத்துக்காட்டிய சில சூத்திரங்களும் பேரகத்தியம் என்ற பெயரால் இக்காலத்து வெளியிடப்பட்ட சூத்திரங்களும் பிற்காலச் சொன்னடையும் வடசொற்களும் விரவப்பெற்றுத் திட்ப நுட்ப மின்றிக் காணப்படுகின்றன. இவற்றை ஊன்றி நோக்குவோர் இவை மிகமிகப் பிற்காலத்தே அகத்தியனுள் பெயரால் இயற்றப் பட்டனவே என்னும் உண்மையினை நன்குணர்வர். எனவே இப்பொழுதுள்ள அகத்தியச் சூத்திரங்கள் தென்மதுரைத் தலைச் சங்கத்து வழங்கிய இலக்கண நூலாகக் களவியலுரையாசிரியர் கூறும் அகத்தியம் என்ற நூலைச் சார்ந்தன ஆகா என்பது வெளிப்படை, ‘ණු அகத்தியர் என்ற பெயருடைய முனிவர் பலர் வடநாட்டிலும் தென்னுட்டிலும் காலத்தோறும் பலராகப் பல இடங்களிற் பேசப் பட்டுள்ளார்கள், அவர்களுள் தலைச்சங்கத்து நூலாகிய அகத்தி