பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தொல்காப்பியம் ஒயினன். கடல்கோளால் தான் இழந்த பஃறுளியாற்றிற்கும் குமரிமலைக்கும் ஈடாக வடதிசையிற் படையெடுத்துச் சென்று அங்கு வாழும் வேந்தரொடு போர்புரிந்து கங்கையாற்றையும் இமயமலையையும் தன்பாற்கொண்ட நிலப்பரப்பை வென்று கைக் கொண்டான். தான் வென்றுபெற்ற நாடுகளைத் தன்கீழ் வாழ் வார்க்குத் தந்தான். இங்ங்ணம் பகைவேந்தர் நிலத்தைத் தன் போர்த்திறத்தால் வென்று கைப்பற்றித் தன்கீழ் வாழ்வார்க்குத் தந்த வெற்றியும் ஈகையுங்கருதி இவ்வேந்தர் பெருமானே நிலந்தரு திருவிற் பாண்டியன் என்ற சிறப்புப் பெயரால் தமிழ் மக்கள் போற்றிப் புகழ்ந்தனர். பனம்பாரஞரும் நிலந்தரு திருவிற் பாண்டியன் எனவே இம்மன்னனது பெயரைக் குறிப்பிடு கின்ருர். எனவே இப்பெயர் சிறப்புப் பெயராதல்வேண்டும், இம் மன்னனது இயற்பெயர் இன்னதென விளங்கவில்லை, பாண்டியன் மாகீர்த்தி' என்ற பெயரால் நச்சிஞர்க்கினியர் இவ்வேந்தனைக் குறிப்பிடுவர். சயமாகீர்த்தியணுகிய நிலந்தரு திருவிற் பாண்டி யன் என அடியார்க்கு நல்லார் இவ்வேந்தனது பெயரை விரித் துக் கூறியுள்ளார். இத்தொடரிற் சயமாகீர்த்தியென்பது நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் சிறப்புப் பெயரின் மொழிபெயர்ப் பாகும். இவ்வேந்தர் பெருமான் தென்மதுரையில் தலைச் சங்கத்தை நிறுவிப் போற்றிய பாண்டியருள் ஒருவன் என்றும் இவனே தொல்காப்பியத்தை ஆக்குவித்தோனென்றும் தெரிகிறது. 'முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கம் இரீஇய காய்ச்சினவழுதி முதற் கடுங்கோனீருயுள்ளார் எண்பத் தொன்பதின்மருள் ஒருவன்சயமாகீர்த்தியணுகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினன்' என அடியார்க்கு நல்லார் கூறியது இவ்வேந்தனது வரலாறேயாகும். இவன் கடல்கோளிற்படாது தன் குடிமக்களைக் காப்பாற்றி நெடு நாள் வாழச்செய்து ஆண்ட சிறப்புடைமை குறித்து நெடியோன் எனவும் வழங்கப்பெற்றன். இவன் இருபத்து நாலாயிரம் யாண்டு அரசு வீற்றிருந்தானென்றும் அதல்ை இவன் அவையிலுள்ளோர்