பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 69 என்னும் நூலினத் தன் பேரவையிற் குழுமிய புலவர் பெருமக்கள் முன்னிலையில் அரங்கேற்ற வெண்ணினன். அவனது அவைக் களத்தே தலைமைப்புலவராய்த் திகழ்ந்தவர், அதங்கோட்டாசான் என்னும் புலவர் பெருமானவார். அவர் அறமே கூறும் நாவினை யுடையார். தமிழ் நூல்களைத் துறைபோகக் கற்றுணர்ந்ததோடு நான்மறைகளையும் முற்றப் பயின்ற பெற்றியுடையார். தம் தாய் மொழியாகிய தமிழிற் பெரும் புலமைபெற்று விளங்கியதுடன், தம் காலத்தில் வடமொழிப் புலவர் சிலர் தமிழ் நாட்டிற் குடி புகுந்தமையாற் பரவத் தொடங்கிய வடமொழி நூல்களையும் நன்கு பயின்று, இவ்விரு மொழிகளின் பொதுவியல்பு சிறப்பியல்பு களையும் தெளியவுணர்ந்திருந்தார். இங்ங்ணம் தென்றமிழும் வட மொழியும் நன்கு தேர்ந்து மனத்துக்கண் மாசின்றி விளங்கிய அறவோராகிய இவ்வாசிரியப் பெருமானை அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்' எனப் பனம்பாரனர் பாராட்டுகின்ருர். இப்புலவர் பெருமானது இயற் பெயர் இ.தெனத் தெரிந்திலது. கல்வியறிவொழுக்கங்களில் தலை சிறந்து விளங்கும் பெரியோர்களை அவர் தம் இயற்பெயரால் அழைப்பதற்கு உளங் கூசிய மக்கள், அப்பெரியோர் வாழும் ஊர் முதலியவற்ருேடு தொடர்பு படுத்திச் சிறப்புப் பெயராற் பாராட்டிப் போற்றுதல் மரபாகும். அம்மரபின்படியே இவ்வாசிரி யரும் தம் இயற் பெயரால் அழைக்கப்பெருது, அதங்கோடு என்னும் தம் ஊர்ப்பெயரால் அதங்கோட்டாசான் என அழைக் கப் பெற்றனர். அதங்கோடு என்னும் ஊரிற் பிறந்து செந் தமிழ்ப் பேராசிரியராய்த் திகழ்ந்தமை குறித்து இவ்வாசிரி யர்க்கு அதங்கோட்டாசான் என்னும் சிறப்புப் பெயர் தமிழகத் தில் நிலைபெற்று வழங்குவதாயிற்று. திருவாங்கூர் வட்ட கையில் கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் பெருவழியில் கற்குளந் தாலுகாவில் அதங்கோடு எனப் பெய ரியதோர் ஊர் உளது. இவ்வூர் பண்டைக் காலத்தில் சிறப் புடைய பேருராய் விளங்கியது என்பதற்குரிய அடையாள