பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 7; அயல்மொழியாளர் கூட்டுறவால் மலையாளம் என வேருேர் மொழியாகத் திரிந்ததென்பதும், அம்மொழியினைப் பேசும் மக்கள் சில நூற்ருண்டுகளில் வேணுட்டிலும் நாஞ்சில் நாட் டிலும் பரவி வாழத் தலைப்பட்டமையால் இந்நாடுகள் மலையாளர் ஆட்சிக்கு உட்பட நேர்ந்ததென்பதும், தென் திருவாங்கூர்ப் பகுதியிலுள்ள நாஞ்சில் நாடும் வேணுட்டின் ஒரு பகுதியும் இன்றும் செந்தமிழ் நாடாகவே திகழ்கின்றன வென்பதும் ஆகிய வரலாற்று முறைமையினை நோக்குங்கால், அதங்கோடு என்னும் ஊரைச்சார்ந்த நிலப்பகுதியைத் தென்பாண்டி நாடெனக்கொள்வதல்லது மலையாள மொழியின் பிறப்பிடமாகக் கூறுதற்குஇடமில்லை. எனவே அதங்கோட்டாசிரியரது ஊராகக் கருதப்படும் அதங்கோடென்பது பாண்டிநாட்டின் பழைய பேருர் களில் ஒன்றெனவே கொள்ளப்படுமென்க. முறைப்பட நூல்செய்யும் ஆசிரியன், தான் இயற்றிய நூலினக் கற்ருேர் குழுமிய பேரவைக்கண் எடுத்துரைத்து, அவர்கள் வினவும் வினுக்களுக்கெல்லாம் பொருந்துமாறு விடை பகர்ந்து, தன் துணியினை நிலைநிறுத்துங் கடமையுடையவளுவன். இக்கடமையை நன்குணர்ந்த தொல்காப்பியனுர், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையிலே செந்தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த அதங்கோட்டாசான் முன்னிலையிலே அவ்வாசிரியர் உள் ளத்தில் தோன்றிய ஐயங்களுக்கெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளத் தக்கவாறு அமைதிகூறித் தொல்காப்பியம் என்னும் இந்நூலைக் குற்றமற அரங்கேற்றினரென்பது வரலாறு. நூலரங்கேற்றத்திற் கலந்துகொள்ளும் பேரறிஞர்கள், நூலிற் காணுங் குற்றங்களைக் களேந்து அந்நூலைப் பலரும் ஏற்றுப் பாராட்டத்தக்க பண்புடைய தாகச் சீர்திருத்தி வெளிப்படுத்துங் கடமையுடையோராவர். நூல ரங்கேறும் அவைக்களத்து வீற்றிருந்து அறிவு நூல்களையாராய்ந்து குற்றமற வெளிப்படுத்தும் பொறுப்பினை மேற்கொண்ட அதங் கோட்டாசிரியர், தொல்காப்பியனர் இயற்றிய தொல்காப்பியத் தைக் கூர்ந்துகேட்டு, அதன்கட் சொல்லப்பெற்ற இலக்கண மரபு