பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தொல்காப்பிய ஆராய்ச்சி அறியப்படாமல் பொருளைக்கொண்டே அறியப்பட வேண்டும் என்றார். யாதன் உருபிற் கூறிற் றாயினும் பொருள் செல்மருங்கில் வேற்றுமை சாரும்.' இவ்வாறு ஒரு வேற்றுமையுருபு வேறொரு வேற்று மைப் பொருளில் வருவது மயக்கம் எனப்பட்டது. ஆகவே வேற்றுமை மயங்கியல் எனத் தனி ஒரு இயல் கொண்டு இம்மயக்கம் பற்றி விளக்குகின்றார். எட்டாம் வேற்றுமை எனப்படும் விளிவேற்றுமை பற்றித் தனி இயலில் விளக்குகின்றார். தொல்காப்பியர் காலம்வரை அது வேற்றுமைக் குழுவினுள் சேர்க் கப்படாமல் தனியாகக் கருதப்பட்டு வந்துள்ளது.' தொல்காப்பியர்தாம் வேற்றுமைக் குழுவினுட் அதனைச் சேர்த்தவராவர். ஆயினும் அது தொன்று தொட்டு வருவது என்பதனை உணர்த்த 'விளி மரபு எனத் தனியியலாகக் கொண்டு அதன் விரிவுகளை விளக்குகின்றார். விளித்தல் என்பது அழைத்தல், "படர்க்கையோரைத் தன் முகமாகத் தான் அழைப் பதுவே" என்று பவணந்தியார் கூறியுள்ளார். இன் றும் மலையாள மொழியில் அழைத்தலை விளித்தல் என்றே வழங்குகின்றனர். ஒருவரை விளிக்குங்கால் அவர் பெயர் அடையும் மாறுதல்களை எல்லாம் விளி மரபில் தெளிவுறக் காணலாம். வேற்றுமை பற்றி இவ்வளவு விரிவாகவும் தெளி வாகவும் வேறு எம்மொழி நூலாரும் உணர்த்தி னாரிலர். பெயர் பற்றியும் அதனைச் சார்ந்த வேற்றுமை பற்றியும் ஆராய்ந்த நாம் இனி வினைபற்றி ஆராய் வோம்.